• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உத்திரமேரூர் அருகே 30 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து வீட்டினுள் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

உத்திரமேரூர் அருகே 30 ஆண்டுகளுக்கு முன் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து வீட்டினுள் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

லட்சுமி காந்த்

UPDATED: Dec 4, 2024, 6:27:57 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப் பட்டுள்ளது‌.

இந்த நிலையில் அங்கே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் என்பதால் அங்கு 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை தளத்தில் விரிசல் ஏற்பட்டு கடும் சேதமடைந்து உள்ளது.

District News & Updates in Tamil

இதனால் தற்போது பெய்த ஃபெஞ்சல் புயல் காரணமாக இங்குள்ள வீடுகளில் தண்ணீர் கசிந்து வீட்டினுள் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் உறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளில் தேங்கிய மழைநீரை மின் மோட்டார் வைத்து வெளியேற்றினார்.

மேலும் இப்பகுதியில் ஆண்டுதோறும் கால்வாய்களை அரசு முறையாக பராமரிக்காதல் மழைகாலங்களில் வீடுகளில் தண்ணீர் வந்து விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Breaking News Today In Tamil 

அதேபோல், இப்பகுதியில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதியும் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. 

எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டு அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended