- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மதம் மாறி காதல் திருமணம் - பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி காதலர்கள் ஆட்சியரிடத்தில் மனு.
மதம் மாறி காதல் திருமணம் - பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி காதலர்கள் ஆட்சியரிடத்தில் மனு.
JK
UPDATED: Dec 4, 2024, 12:20:55 PM
திருச்சி
மதம் மாறிய திருமணம் செய்ததால் தங்களது பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுவதாக திருச்சி ஆட்சியிடத்தில் தம்பதியர் மனு அளித்தனர்.
அம்மனுவில் நான் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அடுத்துள்ள ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி என்பவரது மகள் அகிலா (26). திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த போது திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஜமீல் அகமத் என்பவரை காதலித்து வந்தோம்.
Breaking News Today In Tamil
இந்நிலையில் எனக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்ப்பதற்காக குடும்பத்தினர் முயற்சி எடுத்தபோது எனது காதலைப் பற்றி தெரிவித்தேன். ஆனால் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டில் அடைத்து வைத்தனர். மேலும், வலுக்கட்டாயமாக வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்ய முயற்சித்தனர்.
இந்நிலையில் நான் வீட்டிலிருந்து வெளியேறி திருச்சிக்கு வந்து கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி தனது பெயரை அனீஸ் பாத்திமா என்று மாற்றி ஜமீல்அகமதை திருமணம் செய்து கொண்டேன்.
இந்நிலையில் எங்களது திருமணத்தை அறிந்த எனத குடும்பத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
Latest News Today In Tamil
ஆனால் காவல் நிலையத்தில் இருந்து அகிலாவுக்கு போன் செய்து தங்களுக்கு பல அரசியல் அழுத்தங்கள் இருப்பதால் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
அதன்படி புகார் அளிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற போது திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்கள்.
காதலர்கள்
காவல் நிலையங்களில் எங்களது பாதுகாப்பு தொடர்பான புகார் அளிக்கும்போது மனுவை பெற்றுக் கொள்ளாமல் நிராகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி காவல் நிலையத்தில் எங்களது புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அம்மனு தெரிவித்துள்ளார்.
பேட்டி : அகிலா (எ) அனீஸ் பாத்திமா