கிராம மக்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று அரசுக்கு எச்சரிக்கை.

லட்சுமி காந்த்

UPDATED: Aug 29, 2024, 4:48:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்

சுற்றுவட்டாரப் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைந்தால் விவசாய நிலங்கள் நீர் நிலைகள் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்கள் எந்தெந்த கிராமங்களில், எவ்வளவு எடுக்கப்படுகிறது என வரையறுத்து நில எடுப்பு அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு வந்தது.

விமான நிலையம்

அதன்படி வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பொடவூர், மடப்புரம், இடையார்பாக்கம்,குணகரம் பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி உள்ளிட்ட கிராமங்களில் நிலை எடுப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விட்டது.

ஆனால் விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் விவசாய நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்ட வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாக கூறி பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நாள்தோறும் கிராம மைதானத்தில் ஒன்று கூடி 765 வது நாளாக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஏகனாபுரம்

தங்கள் கிராம நிலங்களை பார்வையிடுவதற்கும் அளவீடு செய்வதற்கும் அரசு அதிகாரிகளையும் அனுமதிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தாலும் அதனை தமிழக அரசும் மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் தற்பொழுது ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பகுதி நிலத்தை கையகப்படுத்துவதற்கான, நில எடுப்பு அறிவிப்பினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை நேற்று நாளிதழ்களில் வெளியிட்டது 

ஏகனாபுரத்தில் உள்ள நிலங்களின் வகைகள், சர்வே எண்கள், கிராம மக்களின் பெயர்கள், உள்ளிட்டவை குறிப்பிட்டு 152.95 ஏக்கர் பரப்பளவிலான 6,19,250 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது.நில எடுப்பது குறித்து ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நில எடுப்பு அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில எடுப்பு அறிவிப்பு வெளியானதை அறிந்த ஏகனாபுரம் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அடைந்தனர்.

Breaking News

இதைத் தொடர்ந்து நேற்று மாலையில் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஒன்று திரண்ட 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலம் எடுப்பு அறிவிப்பு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளனர் என்ற செய்தி இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் பரந்தூர்- கண்ணன்தாங்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளும் நடைபெற்றது.

Latest Kancheepuram District News 

இதனை அடுத்து சாலை முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் நாளைய தினம் மாவட்ட ஆட்சியரை சந்தித்திட நேரம் வாங்கி தருவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏகனாபுரம் கிராம மக்கள் மீதமுள்ள நிலப்பகுதிக்கு நில எடுப்பு அறிவிப்பு வெளிவந்தால் கிராம மக்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்றும், தங்களை தற்கொலைக்கு தூண்ட வேண்டாம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக கிராமத்தில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended