- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆபத்தான நிலையில் கயிறு கட்டி வைத்திருக்கும் சுமார் 200 கிலோ எடையுள்ள வழிகாட்டி பெயர் பலகை.
ஆபத்தான நிலையில் கயிறு கட்டி வைத்திருக்கும் சுமார் 200 கிலோ எடையுள்ள வழிகாட்டி பெயர் பலகை.
செ.சீனிவாசன்
UPDATED: Aug 17, 2024, 8:18:56 AM
நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக தூத்துக்குடி செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகள் ஊர் மற்றும் பகுதிகளை அறிவதற்காக ஆங்காங்கே வழிகாட்டி பெயர் பலகைகள் அரசு துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சீரா வட்டம் பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அண்மையில் நடைபெற்ற விபத்தால் சேதமடைந்து கீழே விழுந்தது
இதனை பராமரிக்காமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சுமார் 200 கிலோ எடை கொண்ட கனத்த பெயர் பலகையை கயிறுகள் கொண்டு அருகில் உள்ள இரும்பு கம்பியில் கட்டி ஆபத்தான நிலையில் மீண்டும் நிற்க வைத்துள்ளனர்.
Latest District News in Tamil
பலத்த காற்று வீசும் போது பெயர் பலகை ஆடி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
மேலும் அருகே பேருந்து நிலையம் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் தலையில் விழலாம் என அச்சமடைகின்றன
எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து அதனை அகற்றிவிட்டு புதிய பெயர் பலகையோ அல்லது பராமரிப்பு செய்து முறையாக வைக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.