அமலாக்க துறை பிடியில் ஆட்சியரின் உதவியாளர் ஸ்டீபன்.

முகேஷ்

UPDATED: Aug 8, 2024, 6:20:57 PM

கன்னியாகுமரி மாவட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சியரின் PA வாக இருந்து வருபவர் தான் இந்த ஸ்டீபன்.

யார் இந்த ஸ்டீபன்?

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவகத்தில் சாதாரண தோட்ட தொழிலாளியாக இருந்தவர் தான் ஸ்டீபன்.

பல ஆண்டுகளுக்கு முன்  நாகராஜன்  கலெக்டர் ஆக இருக்கும் பொழுது கன்னியாகுமரி செல்கிறார் அப்பொழுது அரசு சுற்றுலா மளிகையில் தங்கும் பொழுது அவரிடம் நெருக்கம் ஆகிறார் இந்த ஸ்டீபன்,

Latest Tamilnadu News Tamil

பின்னர் அவரின் தயவால் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆக நியமிக்கபடுகிறார், ஆனாலும் இன்றும் இவருக்கு ஊதியம் பேரூராட்சி அலுவலகம் மூலமே வருகிறது. 

எந்த கலெக்டர் வந்தாலும் அவர்களை தன்னுடைய கைவசம் வைப்பதில் ஸ்டீபன் கைதேர்ந்தவர்.

கலெக்டர்களின் பெயரை சொல்லி கல்லா கட்டுவதில் சிறந்த கெட்டிக்காரர், அரசு ஆணை படி 3 ஆண்டுகளுக்கு பின் ஒரே இடத்தில் ஒரு அரசு அலுவலர் பணி புரிய கூடாது ஆனால் இவர் மட்டும் இதற்கு விதி விலக்கு ? காரணம் கடவுளுக்கே வெளிச்சம் !

Latest Nagercoil News & Live Updates

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை பணி இடம் மாறுதல், லைசென்ஸ், காண்ட்ராக்ட், எல்லாம் இவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 

இன்றைய தினம் இவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் 10 கோடி வரும் என ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் கூறுகின்றனர்.

நாகர்கோயில் வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில் இருக்கும் இவரது பங்களா சுமார் 3 கோடி மதிப்பு பெறும், இவர் மகளின் திருமணம் நடந்த கங்கா கிராண்ட்யூர் மண்டபத்தின் வாடகை 7 லட்சம் ஆனால் இவருக்கு இலவசம். காரணம் இவரின் செல்வாக்கு.

Kanyakumari News Paper Today

இவர் பினாமி பெயரில் குமரி மாவட்டம் சின்ன முட்டத்தில் 3 பெரிய விசைபடகு வைத்துள்ளார் அதில் ஒன்று விலை 2 கோடி. 

20 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரிந்து கோடி கோடியாக கொள்ளை அடித்து வைத்துள்ள இந்த ஸ்டீபனை ஏன் இன்னும் லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்து சொத்துக்களை முடக்கவில்லை என சக ஊழியர்களும், சமூக ஆர்வர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அமலாக்க துறை 

எப்பொழுதும் இவர் அமலாக்க துறையால் கைது செய்யபடலாம் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொறுத்திருந்து பார்ப்போம் மீண்டும் கல்லா கட்டுகிறாரா அல்லது காவலில் இருக்கிறாரா என்று.

 

VIDEOS

Recommended