ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் 12000 ஓய்வூதியம் கிடைக்கும்
Bala
UPDATED: Jun 24, 2024, 3:00:57 AM
ஓய்வூதியத்திட்டம் - எல்ஐசி சாரல் பென்ஷன்: நிதி பாதுகாப்பா எதிர்காலத்திற்கான முதன்மையான தேர்வு
கொரோனா பின் காலகட்டத்தில், நமது வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்வது அனைவருக்கும் முக்கியமாகியுள்ளது. ஓய்வு பெற்ற பின்னர் நிதி பாதுகாப்பு உறுதி செய்வது மிக அவசியம். அதற்காக பங்குச் சந்தை முதல் அரசு நிதி திட்டங்கள் வரை பல்வேறு முதலீடுகளை மக்கள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்திய அரசு காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை வழங்குகிறது. இதன் மூலம், சிலர் ஒவ்வொரு மாதமும் நிலையான தொகையைப் பெற்று வருகின்றனர். இவற்றில் முக்கியமான திட்டமான எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தை பற்றி இங்கே பார்க்கலாம்.
எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும், ஓய்வு பெறும் காலத்தில் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டம் உங்கள் குடும்பத்தாருக்கும் நிதி பாதுகாப்பை வழங்கும்.
தனியார் அல்லது அரசு துறையில் பணிபுரியும் ஊழியர் ஓய்வு பெறும் முன் தனது பிஎஃப் நிதி மற்றும் பணிக்கொடைத் தொகையை இத்திட்டத்தில் முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தின் பலன்களை அனுபவிக்க முடியும். 40 வயதுக்கு கீழானவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது, ஆனால் 80 வயதுவரை எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?
எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 பெற முடியும். இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், முதலீடு அளவில் எந்த வரம்பும் இல்லை. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். முதலீடுக்குப் பிறகு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் பெறலாம்.
ALSO READ | டி.எஸ்.பி கான்ஸ்டபிளாக பதவி குறைந்த கதை.
எல்ஐசி கால்குலேட்டர் படி, 42 வயது நபர் ஆண்டாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12,388 ஓய்வூதியம் பெறலாம். குறிப்பிட்ட காரணங்களுக்காக, பாலிசி வாங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு அதை ரத்து செய்யலாம் மற்றும் கடன் பெறுவதும் சாத்தியம். வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கிறது.