• முகப்பு
  • சினிமா
  • நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தகப்பனார் வி சி க வில் இணைந்தார்களா ?

நடிகர் பிரசாந்த் மற்றும் அவரது தகப்பனார் வி சி க வில் இணைந்தார்களா ?

JK

UPDATED: Aug 2, 2024, 5:05:33 AM

திருச்சி 

வரும் 9ம் தேதி வெளிவர உள்ள நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நடிகர் பிரசாந்த், நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் இன்று திருச்சியில் மாவட்ட ஆட்சியின் சாலையில் உள்ள ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

திரைப்படம் காமெடியும், திரில்லரும் கலந்த திரைப்படமாக வரவுள்ளது.

தற்பொழுது எந்த மொழியில் எடுத்தாலும் அது ஃபேன் இந்தியா படமா மாறுகிறது.

எந்த மொழியில் திரைப்படம் எடுத்தாலும் உடனடியாக மற்ற மொழிகளுக்கு அது மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

எனவே அது ஃபேன் இந்தியா படமாக தான் கருதப்படுகிறது.

நடிகர் பிரசாந்த்

திரைப்படத்தில் நடித்து வெகு நாட்கள் ஆனதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர் என்ற கேள்விக்கு?

இடைவெளி என்று சொல்ல முடியாது ஒவ்வொரு படத்திற்கும் இடையே ஒரு நேரம் தேவைப்படுகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து, பார்த்து செய்துள்ளோம்.

இந்த திரைப்படத்தில் சிம்ரன், சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, ஊர்வசி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

மற்ற படங்கள் எடுக்கும் போது அவர்கmOTT க்கு செல்கின்றனர். நாங்கள் அப்படி செல்லவில்லை அதற்கான நேரம் உள்ளது நாங்கள் தியேட்டரை நோக்கி நகர்கிறோம். 

இந்தத் திரைப்படம் 350 முதல் 400 திரையரங்கில் வெளியாகியுள்ளது.

Tollywood movie news

தயாரிப்பாளருக்கு நடிகருக்கான மோதல் போக்கு ஏற்படுகிறது என்ற கேள்விக்கு ?

நாங்கள் 40வருடமாக தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் உள்ளோம். எனவே அது ஒரு பிரச்சனை கிடையாது.

கண் பார்வையற்றவராய் நடப்பது என்பது மிகவும் கடினமானது அதை உள்வாங்கி நடிக்க வேண்டும். உங்களையும் நம்ப வைக்க வேண்டும். கடினமாக இருந்தாலும் அந்த சவாலை ஏற்றி நடித்துள்ளேன்.

சின்ன பாடலுக்காக கூட மிக கடினத்தோடு நடித்துள்ளோம் எனவே, நல்லபடியாக உங்களிடம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.

படம் வெளியானவுடன் சிலர் கருத்துக்கணிப்பு வெளியிடுகிறார்கள் என்ற கேள்விக்கு?

அவர்களது கருத்து சில நேரங்களில் பாசிட்டிவாகவும் இருக்கலாம், நெகட்டிவ்வாகவும் இருக்கலாம் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளர் தியாகராஜன் இந்த படத்தில் நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு?

ஆகஸ்டு 9ம் தேதி பாருங்கள் 

இயக்குனர் சங்கர்

இயக்குனர் சங்கரின் திரைப்படத்தின் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு?

அவர் கதை எடுப்பார் அது எந்த கதாநாயகன் சரியாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு நடிக்க வைப்பார். என்னை கொண்டு நடிக்க வைக்கும் வேண்டுமென்றால் அதற்குரிய கதை வரும் பொழுது அழைப்பார்.

எனது தோற்றம் மாறிவிட்டது.

இப்பொழுது ரசிகர்களுடைய பல்ஸ் மாறிவிட்டது ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு ரசிப்பு தன்மையோடு கடந்து போகிறது. 5வருடத்திற்கு முன்பாக கதை நன்றாக இருக்குமா என்று பார்ப்பார்கள் இப்பொழுது திரைக்கதை எப்படி இருக்கு என்று ரசிகர்கள் பார்க்கின்றனர்.

சிறிய கதை இருந்தாலும், அது திரைக்கதை நிறைவாக இருந்தால் அந்த திரைப்படம் வெற்றி பெறும்.

சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் படம் என்று நாம் பார்க்க முடியாது. திரைக்கதை நன்றாக இருந்தால் படம் ஓடும் என்பது தெரியாது. மக்களுக்கு பிடிக்க வேண்டும். 

பிரியா ஆனந்த்

தொடர்ந்து படத்தின் கதாநாயகி பிரியா ஆனந்த் பேசுகையில்

திரைப்படத்தின் அனுபவம் மிக நன்றாக இருந்தது. ஒரு காட்சி மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. திரையில் நம் விரும்பிய நடிகர்களை நான் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது. 

அந்தகம் திரைப்படம் இரண்டு, மூன்று முறை பார்க்க வேண்டிய படமாக இருக்கும். வித்தியாசமான படமாக இருக்கும்.

இந்த படத்தில் கதாநாயகன் ஒரு பியானோ வாசிப்பவராக இருக்கிறார். பாடல் படத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இசை படத்தில் மிக முக்கியமாக இருக்கும் ரசிகர்களுக்கு விருப்பமாகவும் இருக்கும். 

OTT

OTT குறித்த கேள்விக்கு? பதில் அளித்த பிரசாந்த் 

காலத்துக்கு ஏற்ற வகையில் ஒரு மாற்றம் வருகிறது நம் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தோம் அதனை தொடர்ந்து டிவி வந்தது அதனை தொடர்ந்து கேபிள் வந்தது யூ,டியூப், இன்டர்நெட் வந்திருக்கிறது தற்பொழுது ஓடிடி வந்திருக்கிறது அந்த நேரத்தில் அவற்றை நம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அது வியாபார நோக்கி செயல்படுவதாக இருக்கிறது. அது காலகட்ட தகுந்தார் போல் மாற வேண்டும்.

எல்லாருக்கும் தற்பொழுது ஒரு மேடை கிடைத்துள்ளது நீங்களே ஹீரோவாகலாம், டைரக்டர் ஆகலாம், உங்களது திறமைகளை வெளியிட ஒரு தளம் கிடைத்துள்ளது. ஆனால், உங்களுக்குள் பொறுப்பு உள்ளது. ரீல்ஸ் பண்ணும்போது மிகவும் பாதுகாப்பாக பண்ண வேண்டும். மற்றவர்களை பாதிக்க கூடாது.

ஹெல்மெட் விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதுமாக நிகழ்ச்சி செய்துள்ளேன் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் விரைவில் வரப்போகிறது நான் உங்களைப் போல ரசிகராக இருந்து அந்த படத்தை எதிர்பார்க்கிறேன்.

விஜய் இந்த படம் கடைசி படம் என தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு?

இது கடைசி படமாக இருக்காது.யார் மக்களுக்கு நல்லது செய்தார்களோ அவர்களுக்கு தன் ஆதரவு தெரிவிப்பேன்.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் அட்மின் ஒருவரை கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற கேள்விக்கு?

சந்தோஷமான விஷயம் திரை உலகத்தையே சீர்குலைக்கின்றனர்.

தயாரிப்பாளரின் பணத்தை ஒரே இரவிலேயே இழக்கின்றார். அனைவருடைய முயற்சிகளும் தவறான முறையில் வெளிவரும் போது கஷ்டமாக உள்ளது. 

எனவே, இது போன்ற திரைப்படங்களை பார்க்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறேன்.

நீங்களும் உங்கள் தகப்பனாரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணைந்ததாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு?

அப்படியா, அது என்ன என்று விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended