• முகப்பு
  • வணிகம்
  • இந்தியாவில் காதி மற்றும் கிராம தொழில்களின் வர்த்தகம் ஒன்றரை லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

இந்தியாவில் காதி மற்றும் கிராம தொழில்களின் வர்த்தகம் ஒன்றரை லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 2, 2024, 10:19:30 AM

சிவகாசி

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ராமநாதபுரம் மத்திய சர்வோதய சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட காதி பவன் விற்பனை நிலையத்தை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் திறந்து வைத்தார், முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- 

பாஜக ஆட்சிக்கு வந்த பின் காதி மற்றும் கிராமத் தொழில்களின் வர்த்தகம் நாடு முழுவதும் வளர்ச்சி பெற்று, அதன் மூலமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தற்போது அதன் வர்த்தகம் 1 1/2 (ஒன்றரை) லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

காதி விற்பனை

தமிழ்நாட்டில் காதி விற்பனை அதிகரித்து, கூடுதல் லாபம் ஈட்ட முடிவதால் தமிழகத்தில் காதி மற்றும் கிராம தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். 

நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் விட பாஜகவினர் கதர் ஆடையணிந்து காதி விற்பனை நிலைய பொருட்களை பயன்படுத்தி கிராமத் தொழிலில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர் என்றார்.

 

VIDEOS

Recommended