இனவெறி குறித்த டிரம்பின் கருத்துக்கு பதில் அளிக்க மறுத்த கமலா ஹாரிஸ்.
கார்மேகம்
UPDATED: Aug 31, 2024, 5:05:11 AM
வாஷிங்டன்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னால் ஜனாதிபதி டிரம்பும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்
தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கி வரும் கமலா ஹாரிஸ் முதல் முறையாக நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்
அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் தனது கொள்கைகள் குறித்தும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் செய்ய வேண்டிய முதல் வேலைகள் குறித்தும் எடுத்துரைத்தார்
கமலா ஹாரிஸ்
பேட்டியின் போது நிருபரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ் முதலாவதாக நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்தவும் ஆதரவளிக்கவும் எங்களால் முடிந்ததைச் செய்வதே எனது மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும்
நான் அமெரிக்க மக்களின் விருப்பங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்களைப் பார்க்கும் போது அவர்கள் முன்னோக்கி செல்லும் புதிய பாதைக்கு தயாராக உள்ளனர் என்பதை நான் அறிகிறேன் என கூறினார்
டிரம்பின் இனவெறி கருத்து
அதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் தேர்தலுக்காக தன்னை கருப்பினத்தவராக காட்டிக் கொள்கிறார் என்ற டிரம்பின் இனவெறி கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது
அந்த கேள்வியை பொருட்படுத்தாத கமலா இதெல்லாம் பல முறை சொல்லப்பட்ட மிகவும் பழைய மற்றும் தேய்ந்து போன புகார் அடுத்த கேள்விக்கு வாங்க என்றார் ?