சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் ஊழியர்கள் முற்றுகை.

சண்முகம்

UPDATED: Aug 19, 2024, 1:47:56 PM

கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பு ஊதிய ஊழியர்கள் இன்று அரை நிர்வாணம் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர் 

பல்கலைக்கழகத்தில் சுமார் 14 ஆண்டுகளாக நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் 202 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்

இரண்டு ஆண்டுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆனால் சென்ற அரசு இந்த அரசும் இதுவரை அவர்களுக்கு எந்த விதமான சலுகையும் வழங்காமல் வெறும் 4000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

எங்களை ஒன்று பணி நிரந்தரம் செய்யுங்கள் அல்லது எங்கள் வாழ்வாதாரத்திற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று எங்கள் வாழ்வாதாரத்திற்கு ஒரு வழிவகை செய்யுங்கள் என்று கூறினார்கள் 

பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கையும் அரசு இதுவரை எடுக்கவில்லை பற்பல போராட்டங்கள் நடைபெற்றது பல பேர் இந்த வேலையில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்கள்

Latest Breaking News 

இன்று காலை ஊழியர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரவனை சந்தித்து முறையிட்டனர் ஆனால் அவர் எந்தவிதமான உத்தரவாதம் தராததால் தான் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர் 

இது தொடர்பாக அண்ணாமலை நகர காவல் துறையினர் தலையிட்டு அவர்களை வெளியேற்றினார்கள்

இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

VIDEOS

Recommended