நடிகை கவுதமி நிலமோசடி புகாரில் கைதான சினிமா பைனான்சியர் அழகப்பன் ஜாமீன் மனு தள்ளுபடி.
கார்மேகம்
UPDATED: Aug 17, 2024, 10:23:26 AM
நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரில் கைதான சினிமா பைனான்சியர் அழகப்பன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
( நடிகை கவுதமி )
நடிகை கவுதமியிடம் ரசிகனாக அழகப்பன் என்பவர் அறிமுகமாகி உள்ளார் நம்பிக்கை ஏற்படும்படி நடந்து கொண்டதால் நடிகை கவுதமி தனது சொத்துக்களை பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பை அவருக்கு வழங்கினார்
பின்நாளில் சினிமா பைனான்சியராகவும் அழகப்பன் மாறினார் இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கண்டிலான் பகுதி துலுக்கன்குறிச்சியில் 150 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் நில புரோக்கர் நெல்லியான் என்பவரிடம் 2016 மார்ச் -16- ல் பேசி முடித்துவிட்டதாகவும் அதற்கான தொகை ரூ. 3- கோடியே 16 லட்சம் வேண்டும் என்று அழகப்பன் கேட்டுள்ளார்
அதன்படி அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சாள் கணக்கில் பணமாகவும் காசோலையாகவும் கவுதமி கொடுத்துள்ளார்.
நில மோசடி
( செபி ) நிறுவனம் விற்பனை செய்யக்கூடாது என அறிவித்த நிலம் அது என்று கவுதமிக்கு தெரியவந்தது மேலும் சில மோசடிகளும் நடந்ததாக கூறப்படுகிறது
இந்த நில மோசடி குறித்து நடிகை கவுதமி அளித்த புகாரின்படி ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அழகப்பன் அவருடைய மனைவி நாச்சாள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர் ( ஜாமீன் மனு தள்ளுபடி)
இந்த நிலையில் அழகப்பன் நிலமோசடி வழக்கில் வருகிற 20- ந் தேதி ராமநாதபுரம் கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட உள்ளார் அப்போது அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் சார் திட்டமிட்டுள்ளனர்
இதற்கான மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
Latest Crime News
இதனிடையே அழகப்பன் மற்றும் அவரின் மனைவி நாச்சாள் தரப்பில் தங்களுக்கு ஜாமீன் கோரி ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் -2- வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்
இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என நடிகை கவுதமி நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார்
இந்த மனுவை நீதிபதி பிரபாகரன் விசாரித்து அழகப்பன் நாச்சாள் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.