மழை நீரில் தத்தளிக்கும் திருவேற்காடு.

Bala

UPDATED: Oct 15, 2024, 1:46:01 PM

திருவேற்காடு

திருவேற்காடு நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீரால் தத்தளித்து கொண்டிருக்கிறது. 

இதற்கு முதன்மை காரணம் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட கால்வாய் பராமரிப்பின்றி, புதுப்பிக்கப்படாததால் பேருந்து நிலையத்தில் தேங்கி இருக்கும் நீர் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

நெடுஞ்சாலைத் துறை 

நெடுஞ்சாலைத் துறை அலட்சியமாக இருப்பதால் பொதுமக்கள் இது போன்ற மழைக்காலங்களில் மிகவும் இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர்.

இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் ஜெ. பாலசுப்ரமணியம் மாவட்ட பொதுச்செயலாளர் (திருவள்ளூர்) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் தலைவர் மக்கள் உரிமை இயக்கம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்துவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

VIDEOS

Recommended