• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • புவனகிரி அருகே அரசு பேருந்து வீட்டுக்குள் புகுந்து கொடூர விபத்து மூன்று சிறுவர்கள் உட்பட இருபதுக்கு மேற்பட்டோர்....

புவனகிரி அருகே அரசு பேருந்து வீட்டுக்குள் புகுந்து கொடூர விபத்து மூன்று சிறுவர்கள் உட்பட இருபதுக்கு மேற்பட்டோர்....

சண்முகம்

UPDATED: Apr 16, 2024, 7:30:04 AM

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தத்தில் சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் பகுதியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது .

அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிற்காமல் அருகில் உள்ள குடியிருப்பிலும் மோதி, மின்கம்பங்களையும் சேதப்படுத்தியது.

இந்த விபத்தில் வீடுகளின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெரியவர்கள் மற்றும் மூன்று சிறுவர்கள், பேருந்துகளில் இருந்த பயணிகள் உட்பட இருபதுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்களை மூன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது விபத்து ஏற்பட்டுள்ள பகுதி தொடர்ந்து விபத்து நடைபெற்று வரும் பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் இதேபோன்று ஏற்பட்டுள்ளன.

இருந்த போதிலும் நெடுஞ்சாலைத்துறை வேகத்தடை உள்ளிட்ட போதுமான விபத்து தடுப்பு அம்சங்களை ஏற்படுத்தாமல் இருந்து வருகிறது என குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

முக்கியமாக தற்போது விடியா அரசால் சரியாக பராமரிப்பு செய்யாமல் ஓட்டப்படும் இதுபோன்ற அரசு பேருந்துகளால் பயணிகள் மற்றும் பொதுமக்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுகிறது எனவும் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

  • 1

VIDEOS

Recommended