• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட நீதிமன்றங்களில் வேலை. விண்ணப்பிக்க முடியாமல் அவதி

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட நீதிமன்றங்களில் வேலை. விண்ணப்பிக்க முடியாமல் அவதி

லட்சுமி காந்த்

UPDATED: May 27, 2024, 2:29:02 PM

District Court Jobs

தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிய 8 ம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28.04.2024 ஆம் தேதி அன்று இந்த அறிவிப்பு பிரபல நாளிதழ்களில் வெளியானது. 

நகல் பிரிவு உதவியாளர் , அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர் , தோட்டப் பணியாளர், காவலர் ,இரவு காவலர், மசால்ஜி, தூய்மைப் பணியாளர், வாட்டர்மென், வாட்டர்வுமன், ஓட்டுனர் உள்ளிட்ட 17 விதமான வேலை வாய்ப்புகளுக்கு 2329 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்றும் 27.05.2024 ஆம் தேதி கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வேலைக்கு விண்ணப்பிக்கின்ற பொதுப் பிரிவினர் வங்கியில் 500 ரூபாய் பணத்தைக் கட்டி விண்ணப்பிக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தது. 

நாளிதழ்களில் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே , காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க சென்றால் சர்வர் மிக மிக ஸ்லோவாக உள்ளதால் விண்ணப்பிக்க இயலவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு மாதமாக நீடித்து வருகின்றது.

 

அதிலேயும் ஒரே நபர் நான்கு விதமான வேலைகளுக்கு வங்கியில் பணத்தைக் கட்டி விட்டு விண்ணப்பிக்க இணையதள‌ சென்டருக்கு காலையில் 9:00 மணிக்கு வந்தால் இரவு 9மணி வரை அவருடைய விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

அதேபோல பல விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரபல பிரவுசிங் சென்டர்களுக்கு செல்கின்றனர். அனைத்து இடங்களிலும் இதே போல தான் இணையதள சர்வர் வேலை செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. 

 District Court Recruitment 2024

வேலை தேடும் இளைஞர் ஒருவர் விடாமுயற்சியாக தினந்தோறும் சென்று இணையதளத்தில் விண்ணப்பிக்க முயற்சிக்கின்றார் .தினந்தோறும் தோல்விதான் ஏற்படுகின்றது.

இதே போல தான் ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் வேலை தேடுபவர்களும் ஒவ்வொரு பிரவுசிங் சென்டராக அலைந்து கொண்டு உள்ளார்கள். 

என்றைக்கு இந்த அறிவிப்பு வெளியானதோ அன்றையிலிருந்து கடைசி தினமான இன்றைய தேதி வரையில் இந்த இணையதளம் சரியாக வேலை செய்யாததால் விண்ணப்பிக்கின்றவர்களில் 90% நபர்கள் விண்ணப்பிக்க இயலாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக வெப் சென்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

பேட்டி. பெத்த ராஜ். பிரவுசிங் சென்டர் உரிமையாளர்.

 

VIDEOS

Recommended