- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மயிலாடுதுறை அருகே மழைநீர் தேங்கி இருந்த கால்வாயில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகள் , தாய் நாய் மீட்க போராடிய பாசப் போராட்டம்
மயிலாடுதுறை அருகே மழைநீர் தேங்கி இருந்த கால்வாயில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகள் , தாய் நாய் மீட்க போராடிய பாசப் போராட்டம்
செந்தில் முருகன்
UPDATED: Apr 14, 2024, 12:55:48 PM
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பரவலாக சிறிது நேரம் மழை பெய்தது.
அப்போது அசிக்காடு பகுதியில் உள்ள மேல தெருவில் மழைநீர் வடிகாலை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
அதே வடிகால் பகுதியில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்று பராமரித்து வந்த நிலையில் மழை நீரில் குட்டிகள் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் செய்வதறியாது தவித்த தாய் நாய் அங்கும் இங்குமாக ஓடி தனது செய்கை மூலம் உதவிக்கு அருகில் இருந்த தெருவாசிகளை அழைத்தது.
பின்னர் குட்டியை தேடி பரிதவித்து நின்ற தாய் நாயுடைய பாச போராட்டத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தண்ணீர் மற்றும் குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டது. தொடர்ந்து தாய் நாய் வடிகாலில் இறங்கி தனது குட்டியை மகிழ்ச்சியுடன் வாயில் கவ்விக்கொண்டு பத்திரமாக எடுத்துச் சென்றது.
ALSO READ | 2029- ல் ஒரே நாடு ஒரே தேர்தல்.
குட்டிகளை மீட்க தாய் நடத்திய பாச போராட்டம் காண்போரை நெகிழச் செய்தது.