• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பொன்னேரி அருகே இரண்டு ஆண்டாக பள்ளி கட்டிடம் பணி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இழுபறி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.

பொன்னேரி அருகே இரண்டு ஆண்டாக பள்ளி கட்டிடம் பணி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இழுபறி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி.

L.குமார்

UPDATED: Jul 5, 2024, 11:38:50 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ஊராட்சியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது இங்கு 35 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்

இந்த பள்ளியில் வகுப்பறை கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும் சிமெண்ட் பூச்சிகள் பெயந்தும் கீழே விழுகின்றன தூண்கள் பலவீனமாக இருப்பதால் கட்டிடத்தின் உறுதி தன்மை முற்றிலும் பாதித்துள்ளது

இந்த நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சி எஸ் ஆர் திட்டத்தில் 18 .90 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள அரசு நிலத்தில் பள்ளி அமைக்க முடிவு செய்யப்பட்டது

புதிய இடத்தில் அரசு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் அனுப்பம்பட்டு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் துவக்கப்பள்ளி செயல்படுகிறது அரசு உயர்நிலைப் பள்ளியில் 350 மாணவர்கள் படிக்கின்றன மேலும் இங்குள்ள மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை இதனால் மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாத சூழல் உள்ளது

காலை நேரங்களில் மாணவர்கள் இறைவனுக்கும் செய்வதற்கு கூட இட வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர் இதை கருத்தில் கொண்டு துவக்கப்பள்ளி கட்டிடதத்தை இடித்து உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது அதேசமயம் துவக்கப்பள்ளி அருகில் உள்ள அரசு இடத்தில் கட்டிடம் கட்ட பூஜை போடப்பட்டது

அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளை கழக செயலாளர் ரமேஷ் என்பவர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கடந்த முறை தலைவர் பதிவிக்கு நின்று தோல்வி அடைந்த நிலையில் தற்போது உள்ள அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு பெயர் சம்பாதித்து விடுவார் என்பதற்காக கட்டிடம் கட்ட தனி ஒருவராக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்

அதேசமயம் திமுக ஒன்றிய செயலாளருக்கு அழுத்தம் கொடுத்து வேலையை நிறுத்தியுள்ளார் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் பள்ளி கட்டிடம் கட்டாமல் தடுத்து வருகிறார் இதனால் அரசு அதிகாரிகள் அதனை கிடப்பில் போட்டனர் இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்

இது போன்ற அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மாணவர்கள் எப்போதும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளியில் பயில்வதற்கு அச்சத்துடன் வந்து செல்லும் அவள நிலையில் நேற்று இரவு பெய்த சாதாரண மழைக்கு பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்நேரமும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

எனவே இதனை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகி ரமேஷ் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் பணிகள் நடைபெற்ற இடத்திற்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளார்

ஆனால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விடிய அரசின் கிளை செயலாளர் உத்தரவை மதித்து வேலை நிறுத்தியது எவ்வாறு நியாயம் என்றும் கேள்வி எழுப்பிய பெற்றோர்கள் திமுக நிர்வாகி மீதும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended