பாபரி மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை.

JK

UPDATED: Dec 5, 2024, 6:31:31 PM

திருச்சி

இன்று இரவு தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வராவ் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத்நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டியன் மற்றும் ராஜன், சக்ரவர்த்தி ஆகியோர் தலைமையில் பாபரி மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் நாசவேலை எதிர்ப்பு சோதனை நடத்தப்பட்டது.

பாபரி மசூதி இடிப்பு நாள்

சோதனையின் போது ரயில்களில் எரியும் பொருட்கள், LPG சிலிண்டர்கள், பட்டாசுகள் மற்றும் பிற தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் மேலே கூறப்பட்ட பொருட்களை யாரேனும் எடுத்துச் செல்வதை யாராவது கவனித்தால், சட்ட நடவடிக்கைக்காக ஆர்பிஎஃப் அல்லது ஜிஆர்பிக்கு தகவல் அளித்து, ரயில்வே ஹெல்ப்லைன் எண் 139ஐப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும், சோதனையின் போது திருச்சி வெடிகுண்டு கண்டறியும் படை, திருச்சி மோப்ப நாய் படை , இருப்பு பாதை காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended