• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருத்தணி முருகன் கோவிலில் நூறு அடி நீளம் கொண்ட கொடி ஏந்தி வந்த தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மீது போலீசார் வழக்கு.

திருத்தணி முருகன் கோவிலில் நூறு அடி நீளம் கொண்ட கொடி ஏந்தி வந்த தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மீது போலீசார் வழக்கு.

சுரேஷ் பாபு

UPDATED: Oct 20, 2024, 9:56:09 AM

தமிழக வெற்றி கழகம்

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் இம்மாதம் நடைபெற உள்ள முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டி அக்காட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் பிரகாசம் ஷஔக்கும் மேற்பட்டோர் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவில் மாடவீதியில் 100 அடி நீளம் கொண்ட கட்சி கொடியை ஏந்தி மாட வீதியில் வந்த நிர்வாகிகளை விதிகளை மீறி வந்ததாக திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் தடுத்து நிறுத்தப்பட்டது.

Latest Thiruvallur District News In Tamil

இதனை அடுத்து அக்கட்சியினர் சிறிய பேனர் கையில் ஏந்திக்கொண்டு மாட வீதியை சுற்றி வந்து பின்னர் 100 ரூபாய் கட்டண வழியில் சென்று தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற உள்ள மாநாடு வெற்றி பெற வேண்டி தரிசனம் செய்துவிட்டு வந்தவர்களை டிஎஸ்பி கந்தன் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விதிகளை மீறி கொடி ஏந்தி வந்ததாக விசாரணை மேற்கொண்டு கோவில் இணை ஆணையர் ரமணி புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

VIDEOS

Recommended