• முகப்பு
  • குற்றம்
  • பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மற்றும் அவரது மனைவியுடன் கைது.

பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மற்றும் அவரது மனைவியுடன் கைது.

JK

UPDATED: Nov 22, 2024, 12:59:02 PM

திருச்சி மாவட்டம்

ஸ்ரீரங்கம் சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (56). இவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத் துணைத் தலைவராக உள்ளார். இவருடன் தேவராஜன் என்பவருக்கு அறிமுகமாகியுள்ளது. தேவராஜன் ஸ்ரீரங்கம் பகுதியில் அனாதை ஆசிரமம் கட்ட நிலம் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

இதை கேட்ட கோவிந்தன் வீட்டுக்கு அருகே உள்ள 17 ஏக்கர் தென்னந்தோப்பை காட்டி அக்கா கணவர் ராமசாமிக்கு சொந்தமானது எனக்கூறி அதனை 19 கோடி ரூபாய்க்கு விலை பேசி உள்ளார். இதில் ரூபாய் 5கோடி அட்வான்ஸ் பணத்தை கோவிந்தனும் அவரது மனைவி கீதாவும் பெற்றனர்.

நில மோசடி

பின்னர் ரங்கசாமியிடம் சென்று வந்த இடத்தை தனக்கு எழுதித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் ரங்கசாமி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அந்த இடத்தை கொடுக்காமலும் பெற்ற அட்வான்ஸ் திருப்பிக் கொடுக்காமல் இருந்தபடியால் அந்த இடத்தை வாங்கியவர் விசாரணை செய்தபோது தனக்கு விற்கப்பட்ட இடம் கோவிந்தனுக்கு சொந்தமில்லை என்பதும்  தெரியவந்தது.

கோவிந்தனிடம் கேட்ட போது பெற்ற பணத்தை திரும்பி தருவதாக தெரிவித்துள்ளார்.

பாஜக

ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கததால் தேவராஜன் இது குறித்து திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவிந்தன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் அஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended