தன் குழந்தை கண் முன்னே தூக்கில் தொங்கிய டிரைவர் சாவு.

அஜித் குமார்

UPDATED: Aug 2, 2024, 7:28:54 AM

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்

அருகே தன் குழந்தை கண் முன்னே நான் சாக போறேன் என விளையாட்டாககூறி வீடியோ எடுத்தவர், தூக்கில் தொங்கிய சில நொடியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகு தியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (35), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.

இதற்கிடையே, ஜெகதீஷின் மனைவி நேற்று முன்தினம் தனது தாய் வீட்டுக்கு பெற்றோரை பார்க்க சென்றிருந்தார். அப்போது, ஜெகதீஷ் வீட்டில் உள்ள பேனில் தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

Latest Tiruvannamalai District News 

அதைத்தொடர்ந்து, அவரது சடலத்தை உறவினர் இறந்த டிரைவர் ஜெகதீஷ்  உறவினர்கள் சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர்.

இதற் கிடையே, ஜெகதீஷின் செல்போனை பார்த்த போது, மனைவி தாய்வீட்டிற்கு சென்றிருந்தபோது, தன் பிள்ளையிடம், 'நான் சாகப் போறேன் டா' எனக் கூறி இதை வீடியோ எடுக்கலாம் என செல்போனை ஆன் செய்து வைத்து விட்டு தன் மகனுடன் பேசிக் கொண்டே படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் புடவையில் தன் கழுத்திற்கு சுருக்கு வைத்துள்ளார்.

Tiruvannamalai News in Tamil 

சுருக்கு வைத்த சில நொடியிலேயே ஜெகதீஷ் உயிர் பிரிந்தது பின்னர் தனது தந்தை விளை யாட்டாக தான் நடிக்கி றார் என அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென அசைவற்றுக் கிடந்த தன் தந்தைக்கு மூச்சு இருக்கிறதா என கைவைத்து பார்த்து மூச்சு நின்றுவிட அவரைக் காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ அதில் இருந்தது. 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டாக வீடியோ எடுத்து டிரைவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மேல் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended