- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நோய் பரப்பும் மையமாக மாறிய திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம்.
நோய் பரப்பும் மையமாக மாறிய திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம்.
ராஜ் குமார்
UPDATED: Aug 17, 2024, 8:44:59 AM
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரப்பும் மையமாக மாறி உள்ளது.
இதனால் பலர் மூச்சு அடைத்து மயங்கி விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கட்டடங்கள் அப்போதைய முதல்வர் மு கருணாநிதியால் கடந்த 2000 ல் திறந்து வைக்கப்பட்டது.
தரை தளம் முதல் தளம் இரண்டாம் தளம் என மூன்று தளங்களாக கட்டப்பட்டுள்ளன.
தரைத்தளத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம், அதன் எதிர்ப்புறம் தாட்கோ அலுவலகம், செய்தியாளர்கள் அறை அதன் எதிரில் ஆண்கள், பெண்கள் கழிவறை, டி பிரிவு பதிவரை பராமரிப்பு மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதிய அலுவலகம், தேர்தல் அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் அலுவலகம், ஓட்டுநர் ஓய்வு அறை, காவலர்களின் அறை உள்ளன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
டெலிபோன் மையம், மருத்துவ காப்பீட்டு மைய அலுவலகம், மாவட்ட தேர்தல் கணிணி அலுவலகம், பொதுமக்கள் குறை கேட்பு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கம், தொழில்நுட்ப பிரிவு அலுவலகம், அமைச்சுப் பணியாளர்கள் உதவி இயக்குனர் அலுவலகம் அதன் எதிரே ஆண்கள் பெண்கள் கழிவறை இருக்கின்றன.
முதல் தளத்தில்
மாவட்ட ஆட்சியரின் இருப்பிட அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகம், தேசிய தகவல் இயல் மையம், கிரீச், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், உள்ளாட்சி தேர்தல் அலுவலகம், யூ பிரிவு எம் பிரிவு, ஆ பிரிவு அலுவலகங்கள், தபால் பிரிவு அலுவலகம், காணொளி அரங்கம், சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வேளாண்மை மற்றும் உழவர் துறை அலுவலகம், இலங்கை தமிழ் மறுவாழ்வு பிரிவு ஜி செக்க்ஷன், சத்துணவு பிரிவு மாவட்ட வழங்கல் அலுவலகம், பேரிடர் அலுவலகம் அதன் அருகே ஆண்கள், பெண்கள் கழிவறை உள்ளது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது தளத்தில்
உதவி ஆட்சியர் பயிற்சி அலுவலகம், வன நிர்ணய அலுவலகம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம், சிறுசேமிப்பு அலுவலகம் அதன் அருகே ஆண்கள், பெண்கள் கழிவறை, சமூக நலன் மற்றும் மகளிர் துறை அலுவலகம், கூட்ட அரங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகம், குழந்தைகள் நலத் திட்ட பணிகள் அலுவலகம், ஆ பிரிவு, எப் பிரிவு, நில எடுப்பு மற்றும் நில மதிப்பு அலுவலகம், என் பிரிவு, நில ஒப்படைப்பு நில மாற்றம் பிரிவு அலுவலகம், நில அளவைகள் பதிவேடுகள் துறை, தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை அலுவலகங்கள் உள்ளன.
Latest Thiruvallur News
இந்த அலுவலகங்களுக்கு தினமும் நூகற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கவும், சந்தேகங்களை கேட்கவும் வந்து செல்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மொத்தம் 60 யூனிட் கொண்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
அனைத்து யூனிட்டுகளிலும் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. தண்ணீர் ஆங்காங்கே தேங்கி உள்ளதால் கழிவறைக்குள் வரும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை கொசுக்கள் கடித்து விரட்டி வருகின்றன.
கழிவறைக்குள் நுழைய முடியாதவாறு துர்நாற்றம் வீசுகிறது. பலர் மூக்கை பிடித்துக் கொண்டே அவசரமாக இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அங்குள்ள காற்று வெளியேற்றும் எக்சாஸ்ட் மின்விசிறிகள் இயங்கவில்லை. துர்நாற்றம் உள்ளுக்குள்ளேயும் வெளியேயும் சுற்றி சுற்றி வீசுகின்றன.
கழிவறைகள் சுத்தம் செய்யப்படாததால் பீங்கான்கள் முழுவதும் காரை படித்துள்ளது. பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது..
கீழ் தளத்தில் உள்ள கழிவறை யூனிட்டுகளில் வெஸ்டர்ன் டாய்லெட் வசதி ஒன்று கூட அமைக்கப்படவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் முதியோர்கள் படாத பாடு படுகின்றனர்.
கழிவறை வழியாக செல்லும் அதிகாரிகள் மூச்சை அடக்கிக் கொண்டே செல்வதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவர்களை என்னவென்று சொல்ல?
Thiruvallur News Today Tamil
60 யூனிட் கழிவறைகளை சுத்தம் செய்ய சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
கிருமி நாசினி தெளிக்கப்படுவதில்லை. இதனால் இந்த ஆட்சியர் அலுவலகம் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் மையமாக மாறி இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்சியர் அலுவலகம் எதிரே இடதுபுறத்தில் மாற்றுத் திறனாளிக்காக ரூ. 3.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறைகள் பாழடைந்து முட்புதர்கள் சூழ்ந்துள்ளன பாம்புகளின் புகலிடமாக இது அமைந்துள்ளது.
இதே போன்று அதன் அருகே பொதுமக்களுக்காக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் தூர்ந்து உடைந்த நிலையில் குப்பைகள் கொட்டும் இடம் போல காட்சி அளிக்கின்றன.
Breaking News Tamil
இதன் உள்ளே செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர் தற்போது எவரும் பயன்படுத்த முடியாமல் சீரழிந்து உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கழிவறைகளில் மின் விளக்குகள் ஏதும் இல்லை ஆங்காங்கே வயர்கள் அறுந்து தொங்கிக் கிடக்கின்றன.
திருப்பதி திருமலைக்கு மற்றும் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் நடைபாதை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர இயற்கை உபாதைகளுக்கு செல்ல முடியாமல் சாலை ஓரங்களிலும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள காலியிடங்களிலும் செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குடிக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிலையம் ஏதும் இல்லை , ஒன்று இரண்டு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆர்.ஓ வாட்டர் மெஷின்களும் பழுது அடைந்துள்ளன.
வசதி படைத்தவர்கள் கடைகளில் குடிநீர் பாட்டில் வாங்கி குடிக்கின்றனர், வசதி இல்லாதவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியாமல் திரும்பி செல்வதை பார்க்க முடிகிறது.
தமிழக அரசின் திட்டமான மஞ்சப்பை பெறும் மெஷின் முடங்கிக் கிடக்கிறது, கை அலம்பும் இடங்களில் வாஸ் பேசின் மற்றும் குழாய் இணைப்பு ஏதும் இல்லை அங்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
செய்தியாளர் அறை எதிரே உள்ள கழிவறைகள் எப்போதும் துர்நாற்றம் அடித்து வருகிறது .
இந்நிலையில் கழிவறை அருகே கலைநயத்துடன் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு வாசகர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் எப்படி வருவார்கள்? எப்படி உட்கார்ந்து படிப்பார்கள் என்பதை ஆட்சியர் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்பது வாசகர்களின் குரல்.
இது பற்றி ஆட்சியர் பிரபு சங்கர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) , பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் வழக்கம்போல் எந்த ஒரு பலனும் இல்லை
இதன் பிறகாவது சரி செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.