மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து சாலை மறியல்

லட்சுமி காந்த்

UPDATED: Aug 14, 2024, 4:32:38 AM

காஞ்சிபுரம் மாநகராட்சி

51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தூய்மை பணி ,குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக தூய்மை பணிக்காக நிரந்தர ஊழியர்களும் மற்றும் ஒப்பந்த நிறுவத்தின் சார்பில் 600க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

குறிப்பாக 100 தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும் மீதமுள்ள 400க்கும் மேற்பட்டோர் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் ரூபாய் 10 ஆயிரத்து 500 ஊதிய ஒப்பந்தத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலையில் முறையான சம்பள உயர்வு அளிக்கப்படாமல் அவ்வப்போது பல்வேறு காரணங்களை கூறி தனியார் ஒப்பந்த நிறுவனம் தவிர்த்து வந்துள்ளது.

சாலை மறியல் 

இந்நிலையில் காஞ்சிபுரம் மூன்றாவது மண்டலத்தில் பணிபுரியும் 53 பணியாளர்கள் காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பும், பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலகம் முன்பும் ஈடுபட்டனர்.

குறிப்பாக தங்களுக்கு 15000 ரூபாய் சம்பள உயர்வும், முறையான தேதியில் வழங்கவும், வாங்கும் சம்பள பணத்தில் தலா ஒவ்வொரு நபரிடமும் ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெறுவதும் உள்ளிட்டவை வலியுறுத்தி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை செய்தனர். 

திமுக

குறிப்பாக திமுக கட்சியை சேர்ந்த நபர்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கான காண்ட்ராக்ட் எடுத்துள்ளதால் நிறுவனம் முறையாக சம்பளம் வழங்குவதில்லை என்றும், குறைவான சம்பளமே அளிக்கின்றார்கள் என்றும், அதிலேயும் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த மாநகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் அருள் நம்பி மற்றும் ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள் என பலர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளுக்கு செல்லுமாறு மிரட்டி அனுப்பினர். மேலும் பணிக்கு செல்லாவிட்டால் வேலையை விட்டு எடுத்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள்

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தங்களின் குடும்ப வாழ்வாதாரம் சரிவர மேற்கொள்ள முடியும் எனவும் குழந்தைகளின் கல்வி, வீட்டு வாடகை என பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் பல ஆண்டுகளாக பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கி வருவதாகவும்

இதனை உயர்த்தி 15,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும், மேலும் இதனை பெறுவதற்கு தலா ஒரு நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் கையூட்டும் அளிக்க வேண்டியுள்ளதாகவும் இதை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended