தமிழகத்தில் வேலை செய்யும் ஐஏஎஸ் அதிகாரிகள் கவர்னருக்கும், மோடிக்கும் ஆதரவாக செயல்படுகிறார்கள்.
JK
UPDATED: Oct 14, 2024, 11:16:09 AM
திருச்சி
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேல்முருகன் :
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்ததான வெள்ளை அறிக்கை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்.
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமே தண்டனை வழங்கப்பட வேண்டும். என்கவுண்டர் மூலம் தண்டனை கொடுப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை எனகூறி பொறுப்பை மத்திய அரசு மீது தமிழக அரசு சாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசு ஜாதி வார கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற எந்தவித தடையும் இல்லை எனவே முதல்வர் சமூகநீதி வழி வந்த திராவிட அரசு ஜாதி வாரிகணக்கெடுக்க உடனே நடத்த வேண்டும்.
99 சதவீதம் ரயில்வே பணிகளில் வட இந்தியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதேபோல் நெய்வேலி, வங்கிகளிலும் வடநாட்டினர் ஆக்கிரமித்துள்ளனர்.
எனவே, அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு பணிகளில் அந்தந்த மாநிலங்களில் 90%மாநில மக்களுக்கு ஒன்றிய அரசு பணிகளை வழங்க வேண்டும்.
2014ல் TNPSC எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் தமிழகத்தில் தேர்வு எழுதலாம் என அதிமுக அரசாணை வெளியிட்டது.
இதற்காக தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
திமுகவுடன் இந்த கோரிக்கையின் அடிப்படையில் தான் நாங்கள் கூட்டணியில் போட்டியிட்டோம்.
40சதவீதம் மதிப்பெண் வாங்கினால் தான் அரசு வேலை என தமிழக அரசு ஓரளவு அதை குறைத்துள்ளது. ஆனால் எனது கோரிக்கை முற்றிலுமாக நிறைவேற்றவில்லை.
இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சியில் தேர்வு எழுதலாம் என்ற சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
திட்டமிட்டு சங்கரிவார், ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் வரக்கூடாது என திட்டமிட்டு செயல்படுகிறது.
தமிழகத்தில் வேலை செய்யும் ஐஏஎஸ் அதிகாரிகள் கவர்னருக்கும், மோடிக்கும் ஆதரவாக செயல்படுகிறார்கள். ஆட்சியாளர்களுக்கு தவறான புள்ளி விவரங்களை தருகிறார்கள்.
விமானம் சாகசத்தில் பங்கேற்ற பொதுமக்கள் இறந்த போது அவர்களுக்கு மாநில அரசு ஐந்து லட்சம் நிதி கொடுத்தது. ஆனால் மத்திய அரசு ஏன் நிதி தரவில்லை. இறந்தவர்களை ஏன் தமிழர்களாக பார்க்கிறீர்கள்.
செம்மொழி நிறுவனத்தில் துணை தலைவராக ஒன்றிய அரசு நியமித்த சுதாசேஷன் திரும்ப பெற வேண்டும். தமிழ் அறிந்த தமிழ் ஆய்வாளரை செம்மொழி நிறுவனத்திற்கு துணைதலைவராக நியமிக்க வேண்டும்.
வடநாட்டில் ஒரு அமைச்சர் புற்று நோய்க்கு மாட்டு மூத்தரம் சாப்பிடலாம் என்று சொல்லி இருக்கிறார். அறிவியலுக்கு புறம்பாக பேசுகிறார்கள். இது போன்றவர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கன்னியாகுமரி பகுதியில் அணு கனிம நிறுவனம் நிறுவ போகிறார்கள் என்ற ஒரு அறிக்கை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது, இதை நிறுவினால் அந்தப் பகுதியை பாலைவனமாக மாறிவிடும். எனவே, அது உடனடியாக திட்டத்தை கைவிட வேண்டும் தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும்.
சாம்சங் நிறுவனத்திற்கு தமிழக அமைச்சர் சாதகமாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழத்தில் எத்தனை நிறுவனங்கள் வந்துள்ளது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சுற்றுச்சூழல், காலநிலை மாறுதல் தொடர்பாக ஒரு சுற்றறிக்கை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது அதனை திரும்ப பெற வேண்டும்.
இது அனைத்து மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது.
PG, UG ஆகியவற்றுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் முறையை நிறுத்த வேண்டும்.
நீட் தேர்வுக்கு மணமகன்-மணமகள் கோலத்தில் தேர்வெழுத சென்றால் தாலியை அறுத்து பின்னர் தேர்வு எழுத சொல்கின்றனர்.
உ.பி, பீகாரில் இதுபோன்ற சோதனைகள் இல்லை. தமிழ்நாட்டில் தான் உள்ளது.
இஸ்லாமிய பெண்களின் புர்காக்களை அகற்றுவது போன்ற நடவடிக்கை உடனடியாக நிறுத்த வேண்டும். தொடர்ந்து அப்படி செயல்பட முயன்றால் நீட் தேர்வு மையங்களில் உள்ளே புகுந்து அடித்து நொறுக்க வாழ்வு கட்சி தயாராக உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்
துணை முதல்வருக்கு உத்திரபிரதேஷ் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தது ஏன்.
விஜய் கட்சி ஆரம்பிக்கட்டும் என்ன ஆட்சி என்று பிற்பாடு பார்க்கலாம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லை என்பது பின்பு பார்க்கலாம்.
சிவாஜி, சரத்குமார், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்தனர். முடிவு என்னவானது என்பது மக்களுக்கே வெளிச்சம்.
உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நிற்காதவர் நேராக சட்டமன்றத் தேர்தலில் நின்று ஜார்ஜ் கோட்டையை பிடிக்க வேண்டும் என விஜம் எண்ணுகிறார்.
சொந்தக்கட்சி மாநாட்டுக்கு பந்தல் கால் நடும் விழாவிற்கு கூட வராத விஜய், முதலமைச்சர் அரியாசனத்திற்கு வருகிறார்.
அரசியல் கட்சி தலைவராகி நாட்டை ஆள நினைக்கும் நடிகர்கள் நாட்டு மக்களின் துன்பம், துயரத்தில் பங்கெடுத்து முதலில் சேவையாற்ற வேண்டும்.
ஈழத்து நிலைப்பாடு, கச்சத்தீவு மீட்பு, பரந்தூர் விமான நிலையம், பூரணமது விலக்கு இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பத்திரிக்கையாளர்களை அழைத்து விஜய் சொல்ல வேண்டும்.
எங்களது சில கோரிக்கைகளை தமிழக அரசு பரிசலிப்பதில்லை செவி சாய்ப்பதில்லை என குற்றம் சாட்டினார்.
ராஜா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.