12 ஆண்டிற்கு ஒருமுறை வரும் மகாளய அமாவாசை

JK

UPDATED: Oct 2, 2024, 8:40:08 AM

திருச்சி மாவட்டம் 

12ஆண்டிற்கு ஒருமுறை வரும் மகாளய அமாவாசை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

நமது முன்னோர்கள் பித்ரு லோகம் எனப்படும் தென்புலத்தில் இருந்து நாம் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் மூலம் ஏறெடுக்கப்படும் எள் மற்றும் நீரினை ஏற்று திருப்தி கொள்வார்கள் என்பது நம்பிக்கை.

நம் முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பித்ரு லோகத்திலிருந்து கிளம்பி நாம் வசிக்கும் பூமியை நோக்கிப் பயண படுவார்களாம், அப்படிப் புறப்பட்டவர்கள் சரியாக ஆவணி மாத பௌர்ணமி நாளுக்கு அடுத்த நாள் பூமிக்கு வந்து சேர்வார்கள்.

அடுத்த 15ந்து நாள்களும் அவர்கள் நம்மோடு பூமியிலேயே தங்கி இருந்து நாம் அளிக்கும் நீரையும், உணவையும் ஏற்றுக்கொண்டு திருப்தியாகி மகாளய அமாவாசை முடிந்ததும் மீண்டும் பித்ரு லோகம் நோக்கிப் புறப்படுவார்களாம்.

மகாளய அமாவாசை

அப்படி நம் முன்னோர்கள் நம்மோடு இருக்கும் இந்த நாள்களில் நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து நமக்கு நல் ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. 

எனவே மகா புண்ணியகாலமான மகாளயபட்சம் 15நாள்களும் நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும்.

ஆனால் அனைவருக்கும் அது சாத்தியம் இல்லை. எனவே மகாளய அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் தரவேண்டும். அப்படிச் செய்தால் ஆண்டு முழுவதும் அமாவாசை நாளில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

ஆன்மிக தகவல்கள்

மகாளய அமாவாசையான இன்று மறைந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க வகையில் திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட நீர் நிலைகளில் குடும்பத்தினர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து படையலிட்டு வழிபடு செய்தனர்.

அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவ குழுவினரும் அங்கு முன்னெச்சரிக்கையாக முகாம் அமைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended