• முகப்பு
  • ஆன்மீகம்
  • திருச்சி அருகே உள்ள தென்திருப்பதியான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு.

திருச்சி அருகே உள்ள தென்திருப்பதியான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நிறைவு.

JK

UPDATED: Oct 15, 2024, 12:28:41 PM

திருச்சி மாவட்டம்

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் வைணவ கோவில்களில் பிரசித்தி பெற்றதாகும்.

திருப்பதிக்கு சென்று வணங்கினால் கிடைக்கும் சுவாமியின் அருள் குணசீலம் பெருமாள் கோவிலை வணங்கினால் கிடைக்கும் என்று கருதப்படுவதால் இது தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்

ஆண்டுதோறும் புரட்டாசிமாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவம் தேர்திருவிழா கடந்த 04- ம்தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினசரி பல்வேறு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பிரம்மோற்சவ விழா 

பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பிரசன்ன வெங்கடாஜலபதி திருவீதி உலா நடைபெற்றது.பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான திருத்தோரோட்டம் கடந்த 12 தேதி காலையில் நடைபெற்றது.

ஆன்மிக தகவல்கள்

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தரை வடம் பிடித்து இழுத்தனர்.பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று இரவு ஸ்ரீபெருமாள் புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

கடந்த 04 ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழா 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நேற்றுடன் பிரம்மோற்சவ விழா இனிதே நிறைவடைந்தது.

 

VIDEOS

Recommended