பட்டாவை பதிவேற்றம் செய்ய 20 ஆயிரம் லஞ்சம் கேட்ட திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன்.
லட்சுமி காந்த்
UPDATED: Jul 26, 2024, 1:46:29 PM
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்
ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த குமரவேல் . இவருடைய மனைவி தமிழரசி.
இவர்களுக்கு அரசு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்கியது. அதை கிராம கணக்கில் ஏற்ற திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனை அணுகியுள்ளார்.
இதற்கு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கருணாகரன் லஞ்சமாக கேட்டுள்ளார். இறுதியாக 15,000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் அளிக்க உறுதி செய்யப்பட்டடது.
லஞ்சம்
இந்நிலையில் லஞ்சம் தர குமரவேலுக்கு மனம் இல்லாத காரணத்தினால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் இன்று திருமுக்கூடல் சாலவாக்கம் சாலையில் அருங்குன்றம் அருகே 15,000 பணத்துடன் குமரவேல்லை வருமாறு கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் அழைத்துள்ளார்.
Latest Kancheepuram District News
அருங்குன்றம் பகுதியில் வைத்து கருணாகரன் பணம் பெற்ற போது, அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் அவரை கைது செய்து திருமுக்கூடல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியது.