பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்.

Bala

UPDATED: Aug 7, 2024, 11:48:40 AM

வினேஷ் போகத் தகுதி நீக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மேல்முறையீடு பரிசீலனை:* தகுதி நீக்கத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இந்திய ஒலிம்பிக் சங்கம் பரிசீலனை செய்து வருகின்றது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்

வினேஷ் போகத், 50 கிலோ எடை பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை இந்திய ஒலிம்பிக் சங்கம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 2 கிலோ கூடுதல் உடல் எடையுடன் இருந்த வினேஷ், இரவு முழுவதும் உணவின்றி, தூக்கமின்றி உடற்பயிற்சி செய்தார். காலையில் 100 கிராம் கூடுதல் எடையால் தகுதி நீக்கப்பட்டார். வினேஷின் தனியுரிமைக்கு மரியாதை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2024 Paris Olympics 

மருத்துவமனையில் வினேஷ் போகத்: தீவிர பயிற்சி மற்றும் நீர்ச்சத்து குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே இரவில் 1.85 கிலோ எடை குறைத்த வினேஷ், தகுதி நீக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை.

பிரதமர் மோடி

"வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். தேசம் உங்களால் பெருமை அடைகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம்." - பிரதமர் மோடி. 

வினேஷின் பின்னடைவை கண்டு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவிடம் பிரதமர் பேசி, உதவுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றார்.

Latest India News in Tamil 

இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கப்பட்டதை அடுத்து, அரையிறுதியில் அவரை வென்ற கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளார்.

வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் முறையீடு செய்துள்ளது.

வினேஷ் போகத் விவகாரம் - மன்சுக் மாண்டவியா விளக்கம்

பி.டி.உஷா

வினேஷ் போகத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கியது; சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத் தலைவரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத்துக்கு உதவ முடியுமா என பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

நாங்கள் ஒலிம்பிக் கமிட்டியிடம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கமளித்தார்.

 

VIDEOS

Recommended