• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருத்தணி முருகன் கோயிலில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல்  நிர்வாகம் போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என முருக பக்தர்கள் குற்றச்சாட்டு.

திருத்தணி முருகன் கோயிலில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல்  நிர்வாகம் போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என முருக பக்தர்கள் குற்றச்சாட்டு.

சுரேஷ் பாபு

UPDATED: Aug 25, 2024, 6:06:06 PM

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி 

சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் 

இந்த திருக்கோயிலில் இன்று அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை கோவிலில் குவிந்தனர் இதனால் பொது வழி தரிசனம் கட்டண வழி தரிசனத்தில் மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு இன்று குவிந்துள்ளதால் 

Latest Thiruthani Murugan Koil

மேலும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை போன்ற தினங்கள் என்பதால் அதிகளவு பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு குவிந்து வருகின்றன சொந்த வாகனங்களில் வருவதால் மலைப்பகுதியில் மூன்று மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது 

ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மீறி செல்வதால் மலைப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போலீசார் கடும் அவதி அடைந்தனர் அடைந்து வருகின்றனர் 

மேலும் ஆட்டோக்களுக்கு மலைக்கோயில் செல்வதற்கு கட்டண இல்லாமல் திருக்கோயில் இலவசமாக அனுமதிப்பதால் அதிகளவு ஆட்டோக்கள் மலைக்கோவிலில் அதிகளவு பொதுமக்களை ஏற்றுக் கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி வருவதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் இவர்களால் ஏற்படுவதாக வாகன ஓட்டுகள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது 

Breaking News 

தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக மலைக்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சாமானிய பக்தர்கள் மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக முருக பக்தர்கள் குற்றச்சாட்டு போதிய முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்யவில்லை பக்தர்கள் தெரிவித்துள்ளனர் 

முக்கிய விஐபி பக்தர்களுக்கு அரசியல் சார்ந்த நபர்களுக்கு மட்டும் முக்கிய வழியில் அழைத்துச் செல்வதால் திருக்கோயில் நிர்வாகம் விதிகளை மீறி விஐபி பக்தர்களுக்கு அனுமதி அளித்ததால் சாமானிய பக்தர்கள் கடும் வெயிலில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் முருக பக்தர்கள் வேதனையுடன் குற்றச்சாட்டு 

ரயில் நிலையம் முதல் மலைக்கோயில் வரை திருக்கோயில் நிர்வாகம் பேருந்து சேவையை இயக்கினால் மட்டுமே போக்குவரத்தினர்களை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இந்து சமய அறநிலைத்துறைக்கு.

 

VIDEOS

Recommended