• முகப்பு
  • இலங்கை
  • முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 மக்களுடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 மக்களுடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு

சப்தம் கிளிநொச்சி

UPDATED: Dec 19, 2024, 2:32:39 PM

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 மக்களுடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகு. இதில் 35 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

original/fb_img_1734618641569

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்க நிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் அறியத்தந்துள்ளனர்.original/fb_img_1734618645199
இவர்களை திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

VIDEOS

Recommended