• முகப்பு
  • சென்னை
  • புகார் அளித்த தன்னை போலீசார் தகாத முறையில் பேசினார்கள் பெண் இயற்கை மருத்துவர் பரபரப்பு குற்றச்சாட்டு.

புகார் அளித்த தன்னை போலீசார் தகாத முறையில் பேசினார்கள் பெண் இயற்கை மருத்துவர் பரபரப்பு குற்றச்சாட்டு.

ஆனந்த்

UPDATED: Sep 30, 2024, 12:41:17 PM

சென்னை

மதுரவாயல் நெடுஞ்சாலையில் 24 மணி நேர தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு இரு தரப்பினர் உரிமை கோரியதால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.

நாகராஜன் என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தற்போது மருத்துவமனை அமைந்துள்ள கட்டடத்தை ஒப்பந்தம் செய்து அங்கு மருத்துவமனை நடத்தி வந்துள்ளார்.

அவருடன் இணைந்து அரவிந்த் என்பவர் இயற்கை மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அரவிந்து இறந்துவிட்டார். 

Latest Crime News Today In Tamil

இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அரவிந்தின் மனைவி நிவேதனா அரவிந்துக்கு பதிலாக அங்கு சென்று இயற்கை மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மருத்துவர் நாகராஜன் மற்றும் நிவேதனா இரு தரப்பிற்கும் இடையே யார் மருத்துவமனையை நிர்வாகம் செய்வது என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிவேதனா, கடந்த 10 ஆண்டுகளாக நாகராஜன் மருத்துவமனைக்கு வரவே இல்லை என்றும் அனைத்தையும் உருவாக்கியது தனது கணவர் அரவிந்த் தான் என்றும் கூறுகிறார்.

Breaking News Today In Tamil 

அத்துடன் கணவர் இறந்த பிறகு கடந்த ஏழு மாதங்களாக தான் அந்த பொறுப்பை எடுத்து நடத்தி வந்ததாகவும் தற்போது திடீரென தன்னை வெளியேறும்படி நாகராஜன் வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

அத்துடன் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அதற்குள் நீதிமன்ற உத்தரவை மீறி மருத்துவமனை வளாகத்தை நாகராஜன் தரப்பு திறந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார்.

Latest Chennai News In Tamil

இது தொடர்பாக புகார் அளிக்க வந்த தன்னை நாகராஜன் தரப்பிற்கு ஆதரவாக போலீசார் தகாத முறையில் பேசி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

எனவே இந்த விவாகரத்தில் நீதிமன்ற உத்தரவு வரும் வரை மருத்துவமனை வளாகத்தை நாகராஜன் தரப்பு திறக்க அனுமதிக்க கூடாது எனவும் தன்னை அவமரியாதையாக பேசிய போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் நிவேதனா கோரிக்கை முன்வைத்துள்ளார். 

District News & Updates in Tamil

அதேசமயம் நிவேதனாவின் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.

 அதுமட்டுமின்றி நிவேதனாய் எந்தவித ஆதாரமும் இன்றி மருத்துவமனையை உரிமை கோருவதாகவும் ஆனால் நாகராஜன் தரப்பு அனைத்து ஆதாரங்களையும் கையில் வைத்துள்ளார் எனவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் போலீசார் யாரும் நிவேதனாவை தவறாக பேசவில்லை என்றும் கூறுகின்றனர். 

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் நாகராஜன் தரப்பு செய்தியாளர்களிடம் பேசும்போது,;

District News Headlines in tamil 

"அரவிந்த் என்பவர் தங்கள் மருத்துவமனையில் பணிபுரிந்தவர். ஆனால் அவர் இறந்த பின்னர் தற்போது அவரது மனைவி மருத்துவமனையை தன் வசம் எடுத்துக் கொள்ள பார்க்கிறார். இங்கு பத்தாண்டுகளாக பணி புரியும் செவிலியர்களை தரக்குறைவாக பேசி அவமதித்து வேலையில் இருந்து வெளியேறுமாறு மிரட்டி உள்ளார். 

மருத்துவமனையின் பெயர் பலகையை மாற்றி தனது செல்போன் நம்பரை அதில் இடம்பெறச் செய்துள்ளார். அதேசமயம் இயற்கை மருத்துவர் என பொய் சொல்லி ஏமாற்றுகிறார்.

மருத்துவமனை

அவருக்கும் இந்த மருத்துவமனைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எங்களிடம் ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன அவற்றை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளோம். 

அதுமட்டுமின்றி நீதிமன்ற தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவித சம்மனோ அறிவிப்போ வரவில்லை. அதனால்தான் நாங்கள் மருத்துவமனையை திறந்து நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

இந்த விவகாரத்தை காவல்துறையினர் சரியான முறையில் தான் அணுகி வருகின்றனர்" நிவேதாவை தரக்குறைவாக போலீசார் பேசவில்லை எனவும் பொய்யான குற்றசாட்டு முன் வைப்பதாக தெரிவித்தார்கள்.

 

VIDEOS

Recommended