மீன் பிடிக்க வலை வீசியபோது முதலை சிக்கியது.

சண்முகம்

UPDATED: Aug 31, 2024, 7:40:53 AM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணம் அருகே கோதண்டவிளாகம் கிராமத்தில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சிலர் வலை வீசினர்.அப்போது சுமார் 100 கிலோ எடை உள்ள முதலை வீசப்பட்ட வலை ஒன்றில் சிக்கியது.

உடனடியாக முதலையை கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போதுதான் முதலையை கவனித்தனர்.

முதலை

முதலை எந்தவிதமான அசைவற்றும் இருப்பதை அறிந்தபோது முதலை ஏற்கனவே நீருக்குள்ளேயே இறந்திருக்கிறது எனவும் அறிந்தனர், அதிர்ச்சியும் அடைந்தனர். 

குளத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் சிறுவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருவதால் இந்த குளத்தில் இருக்கும் முதலைகளைப் பிடிக்க வனத்துறையிடம் பலமுறை அறிவுறுத்திய போது தண்ணீர் அதிகமாக இருக்கிறது என கூறி குளத்தை வேடிக்கை பார்த்துச் சென்றனர் வனத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Cuddalore District News 

கிராம மக்கள் முன்பே கூறியது போல் உடனடியாக முதலைகளை பிடித்து அப்புறப்படுத்தியிருந்தால் முதலை இறந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் குளத்தில் இன்னமும் இரண்டுக்கும் மேற்பட்ட முதலைகள் இருந்து வருகிறது என தெரிவிக்கும் குடியிருப்பு வாசிகளும், பொதுமக்களும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக குளத்திலிருந்து அப்புறப்படுத்தி தர வேண்டும் எனவும் அச்சத்தோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended