இஸ்ரேல் ஈரான் போர் சூழல் இந்தியர்கள் ஈரானுக்கு செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்.
Bala
UPDATED: Oct 2, 2024, 11:53:32 AM
இஸ்ரேல் ஈரான் போர்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் வெற்றிகரமாக முடிந்ததாக ஈரான் அதிபர் அறிவித்தார். "எங்கள் மக்களை இழந்திருக்கிறோம், ஆனால் தோற்கவில்லை," என்று அவர் கூறினார்.
ஈரான் ஏவுகணை தாக்குதலை அடுத்து, ஜெருசலேமில் நடைபெற்ற பாதுகாப்பு கேபினெட் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஒரு மிகப்பெரிய தவறு, அதன் விலையை ஈரான் நிச்சயம் செலுத்தும். அவர்களின் தாக்குதல் தோல்வியடைந்துள்ளது" என்று கூறினார்.
ஈரான் தாக்குதல்
ஈரான் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியதைத் தொடர்ந்து, பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், முழு நாட்டையும் தாக்கும்வரை போராடுவோம் என்று ஈரான் அனைத்துப் படைகளின் தலைவர் முகமது பகேரி எச்சரித்துள்ளார். "அடுத்த தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.
வான்வழித்தடம் தற்காலிகமாக மூடல்
இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பை முன்னிட்டு, ஈரான் தனது வான்வழித் தடத்தை தற்காலிகமாக மூடியது. நாளை காலை வரை அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்திய வெளியுறவுத்துறையின் எச்சரிக்கை
இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவுத்துறை, இந்தியர்கள் ஈரான் செல்ல தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.