சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மேயர் எதிர்ப்பு சுயேச்சை பெண் கவுன்சிலர்.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 29, 2024, 12:04:40 PM

காஞ்சிபுரம் மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு எஸ்விஎன். பிள்ளை தெரு, குறுக்கு வீதி பகுதியில் மாநகராட்சி சார்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 16-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி துரைராஜ் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

Kanchipuram District News

இந்த நிலையில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக இன்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல்,

மேயர் எதிர்ப்பு சுயேட்சை கவுன்சிலரான சாந்தி துரைராஜ் சுற்றுலா சென்று விட்டு திரும்பி வந்தார். இவர் அதிமுக கட்சிக்கு ஆதரவாக உள்ளார்.

Kanchipuram News in Tamil

வார்டிற்கு திரும்பி வந்த சாந்தி துரைராஜ் சிமெண்ட் சாலை பணிகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் சிலருடன் சேர்ந்து கையில் பெட்ரோல் பாட்டிலை வைத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கையில் பெட்ரோல் பாட்டிலுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை மாநகராட்சி கவுன்சிலரின் செய்கையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Kancheepuram News & Live Updates

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் மற்றும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோரிடம், மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி துரைராஜ் கூறும்போது, சாலைப் பணிகள் தரமாக அமைக்கவில்லை, மாநகராட்சி பொறியாளர் பிரிவு அதிகாரிகள் முறையாக வந்து கண்காணிக்கவில்லை அதனால் தான் சிமெண்ட் சாலை பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டேன் என தெரிவித்தார்.

Today News Kanchipuram Tamilnadu

மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டு தரமான சாலை அமைக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி துரைராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

VIDEOS

Recommended