• முகப்பு
  • அரசியல்
  • பூஜை பொருட்களை அரசாங்கமே யாரைக் கேட்டு ஏலம் விடுகின்றீர்கள் ? திமுக மாநகர நிர்வாகி.

பூஜை பொருட்களை அரசாங்கமே யாரைக் கேட்டு ஏலம் விடுகின்றீர்கள் ? திமுக மாநகர நிர்வாகி.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 10, 2024, 6:19:55 PM

Latest Kancheepuram News & Live Updates

காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரகுப்தர் கோயிலில் தேங்காய், பழம், பூ மற்றும் நெய் விளக்கு முதலியவை விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்குவது தொடர்பான ஏலம் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மூன்று மடங்கு ஏலம் போனது. 

ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில் தற்போது ரூ.21,11,777 க்கு ஏலம் போனது.

காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத் தெருவில் அமைந்துள்ளது சித்திரகுப்தர் கோயில். சித்திரகுப்தருக்கு தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே தனிக் கோயில் உள்ளது. கி.பி. 9-ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. 

News

சித்திரா பௌர்ணமி விழா இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவாகும். பௌர்ணமி, அம்மாவசை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்தக் கோயிலுக்கு தேங்காய், பூ, பழத்துடன், தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்துவர். இந்தக் கோயிலில் வழிபட்டால் எம பயம் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோயில் கடந்த ஆண்டு ஜூலை 2023-ம் ஆண்டு முதல் ஜூன் 2024-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேங்காய், பழம், பூ விற்பனை செய்வதற்கான ஏலம் ரூ.7 லட்சம்வரை போனது. கோயில் தீபம் நிர்வாகம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இந்த முறை அதனையும் ஏலம் எடுப்பவர்களே விற்பனை செய்யலாம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஏலம் நடைபெற்றது.

திமுக கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் செயற்குழு உறுப்பினருமான சிகாமணி உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகள் இது குறித்து ஆட்சேபனை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Latest District News in Tamil

இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரிகளை பார்த்து , இதோ பார் இதோ பார் என ஒருமையில் பேசி, கேள்வி கேட்பது என் இஷ்டம், ஏலம் விடுவதில் சென்ற ஆண்டே தவறு செய்து உள்ளீர்கள் அதை நீங்கள் உணர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பார்த்து பகிங்கரமாக குற்றம் சாட்டியதால் அங்கு சற்று நேரம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே மிகவும் காலதாமதமாக வந்த இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களால் ஏலம் எடுக்க வந்திருந்த நபர்கள் டென்ஷனில் இருந்தார்கள். 

இந்த நேரத்தில் திமுகவினர் தேவையில்லாத சலசலப்பை உண்டாக்கியதால் பக்தர்களும் நெய் விளக்கு ஏற்றி பரிகாரத்தை செய்து கொள்ள இயலவில்லை. அதேபோல் ஏலம் விடுவதும் லேட் ஆகிக்கொண்டே சென்றது.

latest Kancheepuram news & live updates 

கோயில் செயல் அலுவலர் அமுதா, கோயிலில் போதிய ஊழியர்கள் இல்லாததால் தீபம் விற்பதற்கான உரிமையை ஏலதாரருக்கே வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கான ஏலம் தொடங்கிய நிலையில் 5-க்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி ஏலம் கேட்டனர். இதில் ரூ.15 லட்சம் வரை ஏலம் போனது. 

பின்னர் மறைமுக டெண்டர் முறையில் சிலர் பெட்டிகளில் ஏலத் தொகை குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தனர். அதில் அதிமுகவின் நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் ரூ.21 லட்சத்து 11 ஆயிரத்து 777-க்கு ஏலம் கேட்டிருந்தார். அதிக பட்ச தொகை குறிப்பிட்டிருந்த அவருக்கு ஜூலை 2024 ஜூலை 2025 ஆண்டுக்கான ஒரு வருட ஏல உரிமை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு இந்த கடை ஏலம் ரூ.7 லட்சத்துக்கு போயிருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.21 லட்சத்தை தாண்டி ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் திமுக, அதிமுக, பாஜக, உள்பட பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர்.

அறங்காவலர் குழுத் தலைவர் ரகுராமன், செயல் அலுவலர் அமுதா, உறுப்பினர்கள் சந்தானம் ராஜாமணி, ஆகியோர் முன்னிலையில் இந்த ஏலம் நடைபெற்றது.

 

VIDEOS

Recommended