50 கீழே கிடப்பதாக கூறி நூதன முறையில் ரூ.3 லட்சம் கொள்ளை.

முருகன்

UPDATED: Jul 15, 2024, 10:08:12 AM

Latest Tamil Crime News 

சென்னை வளசரவாக்கம் கைக்கான் குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாரதி (38). தனியார் பள்ளி ஒன்றில் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். 

தற்போது சொந்தமாக வீடு கட்டி வரும் அவர், கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள யூனியன் வங்கியில் ரூபாய் மூன்று லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

தனது புல்லட் இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் வைத்துக் கொண்டு வீடு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் ஸ்கூட்டியில் வந்த நபர் ஒருவர் ரூபாய் 50 கீழே கிடப்பதாக கூறியுள்ளார்.

Latest Chennai District News 

அது உங்கள் பணம் தானா என பாரதி இடம் அவர் கேட்க, அதற்கு தன்னுடைய பணம் இல்லை என பாரதி மறுத்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். 

இதையடுத்து தனது வண்டியின் முன்பக்கத்தை கவனித்த போது அதிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்தை காணவில்லை என்பதை பாரதி உணர்ந்துள்ளார்.

Breaking News In Tamil 

உடனே இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பணத்தை கொள்ளை அடித்த நபரை ஆந்திராவில் சென்று பிடித்தனர். 

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் ஓ ஜி குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் (32) என்பது தெரியவந்தது. ராஜசேகரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்த போலீசார், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட அவரது மூன்று கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended