குவைத் தீ விபத்தில் பலியான சின்ன துறையை பற்றி விவரம் அறியாமல் உறவினர்கள் தவிப்பு.

சண்முகம்

UPDATED: Jun 13, 2024, 6:05:07 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் குவைத்தில் வேலை செய்த சின்னதுரை என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மரணம் அடைந்தார் 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள முட்டம் கிராமத்தில் குவைத்தில் சின்னதுரை என்பவர் இதற்கு முன்பு இந்த கம்பெனியில் NPTC கம்பெனியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் அங்கு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கின்றார்

இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை இந்த நிலையில் மீண்டும் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு முட்டம் கிராமத்திற்கு வந்துள்ளார்

இங்கு உள்ள ஒரு புரோட்டா கடையில் இவர் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார் பின்பு கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார் இவர் கடனை அடைப்பதற்காக மீண்டும் அதே கம்பெனியில் சமையல் மாஸ்டராகவும் ஸ்டோர் கீப்பராகவும் பணிபுரிந்து இருக்கின்றார்

இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் தனது மனைவி தனது அண்ணன் உறவினரிடம் பேசி உள்ளார் இவர் தினசரி இரண்டு வேலையும் தனது மனைவியுடன் பேசி உள்ளார்

இந்த நிலையில் குவைத்தில் விடியற்காலை 4 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4222 என்ற அறையில் தங்கி உள்ளார் இந்த அறையில் இரண்டு பேர் தங்கி உள்ளார்கள்

அந்த பில்டிங்கில் மொத்தம் 195 அறைகள் உள்ளன 4222 அறையில் 2 பேர்  தங்கியுள்ளார்கள் இதில் சின்ன துறை என்பவரும் அடக்கம் இவர்கள் பகல் டூட்டி பார்த்துவிட்டு இரவில் உறங்கியுள்ளனர் மற்றொருவரும் தங்கி உள்ளார் அவர் இரவு டூட்டிக்கு சென்று விட்டார் அதனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது

சின்னதுரை என்பவர் இவருடன் தங்கியுள்ளார் இருவரும் காணவில்லை என்று கூறப்படுகிறது இது தொடர்பாக மரணம் அடைந்த சின்ன துறையின் நண்பர்கள் மயிலாடுதுறையில் இருந்து அவரது அண்ணனுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்கள் அவரது மனைவிக்கும் தகவல் தெரிவித்துள்ளார்கள்

அவரது உறவினர் மனோகரன் முட்டம்  கிராமத்தை சேர்ந்தவர் இதே கிராமத்தைச் சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்தின் சொந்த ஊர் தான் முட்டம் , மினிஸ்டர் மஸ்தான் மூலமாக வெளிநாட்டில் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிவதற்கு தொடர்பு கொண்டு இருக்கின்றார்கள்

குவைத் நாட்டில் இருந்து அந்த கம்பெனியின் மூலம் எந்த விதமான செய்தியும் இதுவரை வரவில்லை மத்திய அரசை தொடர்பு கொண்டதற்கு சரியான முறையில் பதில் கிடைக்கவில்லை தமிழக அரசு மூலமாக இவர்கள் குடும்பத்தார்கள் முயன்று வருகிறார்கள்

முட்டம் கிராமத்தில் தீ விபத்தில் இறந்த சின்னதுரை அனைவரிடம் அன்பாக பேசக் கூடியவர் என்று கூறப்படுகிறது இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

 

VIDEOS

Recommended