• முகப்பு
  • ஆன்மீகம்
  • மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா - தமிழக அரசு அறிவிப்பு !!!

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா - தமிழக அரசு அறிவிப்பு !!!

Bala

UPDATED: Jul 3, 2024, 2:32:28 PM

சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு ஆடி மாத அம்மன் திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலாவில் அழைத்து செல்வது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, “ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கும் 60 முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

இதற்கான செலவினத் தொகை ரூ.50 இலட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

பயண திட்டம் :

சென்னை மண்டலம் :

- அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில், மயிலாப்பூர்

- அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், பாரிமுனை

- அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில், திருவொற்றியூர்

- அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், மாங்காடு

- அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு

தஞ்சாவூர் மண்டலம் :

- தஞ்சாவூர் பெரியகோயில்

- அருள்மிகு வராகியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்

- அருள்மிகு பங்காரு காமாட்சியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர்

- அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், திருக்கருகாவூர்

- அருள்மிகு கர்ப்பக ரட்சாம்பிகை திருக்கோயில், பட்டீஸ்வரம்

- அருள்மிகு துர்கையம்மன் திருக்கோயில்

கோயம்புத்தூர் மண்டலம் :

- அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்

- அருள்மிகு மாரியம்மன், அங்காளம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி

- அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை

- அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில்

- அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில்

திருச்சி மண்டலம் :

- அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர்

- அருள்மிகு கமலவள்ளி நாச்சியார் திருக்கோயில்

- அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல்

- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்

- அருள்மிகு உஜ்ஜையினி மாகாளியம்மன் திருக்கோயில்

மதுரை மண்டலம் :

- அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில்

- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர்

- அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், மடப்புரம்

- அருள்மிகு ராக்காயியம்மன் திருக்கோயில், அழகர்கோவில்

- அருள்மிகு ஜனகை மாரியம்மன் திருக்கோயில், சோழவந்தான்

திருநெல்வேலி மண்டலம் :

- அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

- அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், முப்பந்தல்

- அருள்மிகு ஒன்னுவிட்ட நங்கையம்மன் திருக்கோயில், சுசீந்திரம்

- அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், மண்டைக்காடு

- அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில், குழித்துறை

பயணத் திட்டம் :

ஆடி மாதத்தில் ஆன்மிகப் பயணம் 19.07.2024, 26.07.2024, 02.08.2024, 09.08.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. 

விண்ணப்ப விவரங்கள் :

மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 முதல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை www.hrce.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்து அல்லது மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ 17.07.2024க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் தகவல்களுக்கு :

- [HRCE](http://www.hrce.tn.gov.in) (தொலைபேசி: 1800 4253 1111)

- சென்னை: 99417 20754, 044-29520937

- தஞ்சாவூர்: 0436-2238114

- கோயம்புத்தூர்: 0422-2244335

- திருச்சி: 0431-2232334

- மதுரை: 0452-2346445

- திருநெல்வேலி: 0462-2572783

 

VIDEOS

Recommended