தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக காட்சியளிக்கும் காஞ்சிபுரம் குமரகோட்ட முருகர் கோவிலில் வெள்ளி தேர் உற்சவம்
லட்சுமி காந்த்
UPDATED: Jul 17, 2024, 5:15:53 AM
கந்தபுராணம் அரங்கேறிய தளம்
காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டம் என அழைக்கப்படும் முருகர் கோவில் கந்தபுராணம் அரங்கேறிய தளம் என அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால், வள்ளி-தெய்வானை பிரகாரத்தில் தனித்திருக்கின்றனர்.
முருகர், கச்சியப்ப சிவாசாரியாரைக் கொண்டு, "திகடச் சக்கரம்" என அடியெடுத்துக் கொடுத்து கந்தபுராணம் எழுத பணித்த தலம்.
வெள்ளித் தேர் உற்சவம்
பல்வேறு பெருமைகளை கொண்ட கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் ஆடி மாத பிறப்பை ஒட்டி வெள்ளித் தேர் உற்சவம் நடைபெற்றது .
உற்சவ முருகருக்கு வெள்ளை நிற பட்டாடை உடுத்தி கையில் வேல், மற்றும் சேவல் கொடி ஏந்தி தலையில் கிரீடம் தரித்து மல்லி ,முல்லை, சாமந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களைக் கொண்டு தருவித்த மாலை அணிவித்தும் , அதேபோல் வள்ளி-- தெய்வானைக்கு கிளி பச்சை நிற பட்டாடை உடுத்தியும் ,அழகிய குண்டு மல்லிகளை கொண்டு தருவித்த மாலை அணிவித்தும், வள்ளி - தெய்வானை சமேத குமரகோட்ட முருகர் வெள்ளி தேரில் காட்சியளித்தார்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 17-07-2024
வள்ளி - தெய்வானை சமேத குமரக்கோட்ட முருகர் வெள்ளித்தேர் உற்சவம்
மூன்று நிலைகளைக் கொண்ட இந்த வெள்ளித் தேரானது கோவிலில் உள் பிரகாரங்களை சுற்றி வந்து தூப தீப ஆராதனை காட்டி கோவில் நிலைக்குத் திரும்பியது.
இந்த வள்ளி - தெய்வானை சமேத குமரக்கோட்ட முருகர் வெள்ளித்தேர் உற்சவத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
அரோகரா அரோகரா கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் வெள்ளித்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கோஷம் கேட்டவாறு இருந்தது குறிப்பிடத்தக்கது.