- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புரட்சி பாரதம் கட்சி சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என பூவை ஜெகன் மூர்த்தி எச்சரிக்கை .
புரட்சி பாரதம் கட்சி சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என பூவை ஜெகன் மூர்த்தி எச்சரிக்கை .
சுரேஷ் பாபு
UPDATED: Nov 24, 2024, 7:28:03 AM
திருவள்ளூர் மாவட்டம்
சட்டசபையில் விவாதத்தின் போது வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப் போவதாகவும் அறிவிப்பு .
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதால் வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரி புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் எம்எல்ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த நாளை சட்ட நாளாக புரட்சி பாரதம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 26-ம் தேதி கொண்டாடி வருகிறது அதன்படி இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் நடைபெற இருக்கின்றது.
சமீபத்திலே ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரை சக்தியால் வெட்டுகின்ற சூழ்நிலை நடந்தேறியது. அதே போல் கடந்த மாதம் கன்னியாகுமரியில் ஒரு வழக்கறிஞரை தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்கள் அதற்கு முன்பு சென்னையில் ஒரு வழக்கறிஞரை கொன்றிருக்கிறார்கள் இதுபோல் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.
வழக்கறிஞர்களுக்கு ஒரு பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கடந்த வருடத்திலேயே புரட்சி பாரதம் கோரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து ஒரு வருடத்தில் எத்தனை வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
அந்த சட்டம் வந்திருந்தால் கண்டிப்பாக ஒரு வழக்கறி கூட இது போன்று சமூக விரோதிகளால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.
இன்றைக்கு தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் யாரை நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருக்கின்றனர்.
பூவை ஜெகன் மூர்த்தி
ஆகவே போதையும் தடுக்கப்பட வேண்டும். கண்டிப்பாக தமிழ்நாட்டில் எத்தனை வழக்கறிஞர்கள் எந்தெந்த இடங்களிலே யாரால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கின்ற ஒரு விவரத்தினை அரசுக்கு தெரியப்படுத்தி அரசுனுடைய கவனத்தை ஈர்க்கின்ற வகையிலே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தி முதலமைச்சரிடத்திலே அதற்கான கோரிக்கை மனுவை அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சட்டசபையிலும் விவாதத்தின் போது இந்த கருத்தை வலியுறுத்ப் போவதாகவும் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்த கேள்விக்கு, அண்ணாதுரை காலத்தில் இருந்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கின்ற ஒரு கொள்கையாகவே திமுகவினர் வைத்திருக்கிறார்கள். அந்த கொள்கை உடைபடுமா அல்லது அது தொடருமான என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் திமுக அசைந்து கொடுக்காது என்று தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல்
விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது குறித்த கேள்விக்கு, புரட்சி பாரதம் கட்சியிலிருந்து ஒரே ஒரு நபர் கூட அந்த கட்சிக்கு யாரும் போகமாட்டார்கள் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயிருப்பதால் மக்கள் திமுக அரசை தூக்கி எறிய தயாராகிவிட்டதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சிபாரதமும் இணைந்து போட்டியிடும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது வழக்கறிஞர்கள் பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர், பி.வின்சென்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.