திமுக மகளிர் அணியினரை புலனாய்வு பத்திரிகையாளர் என மிரட்டி ஆபாசமாக பேசிய நபர் மீது டிஎஸ்பியிடம் புகார்
JK
UPDATED: Oct 5, 2024, 9:17:25 AM
திருச்சி மாவட்டம்
தொட்டியம் தாலுகாவை சேர்ந்த மாவட்ட மகளிர் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரேணுகா ,தொட்டியம் நகர மகளிர் அணி அமைப்பாளர் சீதா, கிழக்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் முருகவேணி, தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தனித்தனியே புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் புலனாய்வு வார பத்திரிக்கையாளர் என கூறிக்கொண்டு வந்த நபர் தாங்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கட்சியினருடன் தகாத உறவு வைத்துள்ளதாகவும் கூறி அது தொடர்பாக செய்தி வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பணம் கேட்டு வருகிறார்.
திமுக மகளிர் அணியினர்
எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தனர்.
4பேரும் தனித்தனியே அளித்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். திமுக மகளிர் அணியினர் புலனாய்வு பத்திரிக்கையாளர் மீது டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு