ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு, ஏரியில் லாரியை கழுவ சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயம்.

லட்சுமி காந்த்

UPDATED: Oct 11, 2024, 6:10:24 PM

காஞ்சிபுரம் மாவட்டம் 

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தினத்தை முன்னிட்டு, வீடுகளை சுத்தம் செய்து , வாகனத்தை கழுவி, பாடப்புத்தகத்தை வைத்தும் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு பூஜையிட்டும் வணங்குவதும் காலங்காலமாக கடைப்பிடித்து வரப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் . இவருடைய மகன் கார்த்தி (வயது 30) . இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். 

Breaking News In Tamil

ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வாகனங்களுக்கு பூஜை போடுவதற்காக, புதுப்பேடு அருகே உள்ள ஏரிக்கு லாரியை எடுத்துச் சென்று நீரில் கழுவி லாரியை சுத்தப்படுத்தி கரையில் விட்டுவிட்டு குளிக்க போனவர் தண்ணீரில் மூழ்கி காணவில்லை. 

நீண்ட நேரமாக கார்த்திக் கரைக்கு வராததால், அருகே வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த மற்ற ஓட்டுனர்கள் சோமங்கலம் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

Latest District News In Tamil

கார்த்திக் தந்தை சிவக்குமார் ஏரிக்கரைக்கு ஓடி வந்து அங்கும் இங்கும் தேடி பார்த்தார். அதே போல தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் காலை 11 மணியளவில் நீரில் மூழ்கி காணாமல் போன கார்த்திக்கை மாலை 6 மணி வரை சுமார் 7 மணி நேரமாக தேடி வருகின்றனர்.

சுமார் 7 மணி நேரமாகியும் மாயமான கார்த்திக்கை கண்டுபிடிக்க முடியவில்லை மேலும் இருள்படர்ந்து விட்டதால், கார்த்திக்கை தேடும் படலம் தற்சமயம் கைவிடப்பட்டது. நாளை காலையில் மீண்டும் தேடிப் பார்ப்போம் என்ற முடிவுக்கு தீயணைப்புத் துறையினர் வந்துள்ளனர்.

ஆயுத பூஜை முன்னிட்டு லாரியை கழுவ சென்ற வாலிபர் நீரில் மூழ்கி மாயமானது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Kancheepuram District News

கார்த்திக் உடன் 5 லாரிகள் கொண்டு வந்து அதனுடைய ஓட்டுநர்கள் கழுவிக்கொண்டு இருந்தனர் . 

நீரில் மூழ்கிய கார்த்திக் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், அவரை தேடிக் கண்டுபிடிக்க எந்த ஓட்டுனரும் முயற்சி எடுக்கவில்லை, முன் வரவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய செயலாக உள்ளது என சிவகுமார் கதறி அழுதது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது.

 

VIDEOS

Recommended