• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காட்டுமன்னார்கோவில் அருகே  மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்கும் இடம் அருகில் வைக்கப்பட்ட ஊழல் பேனரால்.. பரபரப்பு. 

காட்டுமன்னார்கோவில் அருகே  மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்கும் இடம் அருகில் வைக்கப்பட்ட ஊழல் பேனரால்.. பரபரப்பு. 

சண்முகம்

UPDATED: Aug 6, 2024, 4:58:19 AM

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்

அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் டி.நெடுஞ்சேரி ஊராட்சியில் பட்டியல் சமுதாய பயனாளர்களுக்கு கழிவறை கட்டித் தருவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு.

இவர்களுக்கு ஒதுக்கீடு செய்த பிரதம மந்திரி இலவச கழிவறை திட்டத்தில் 90 கழிவறைகள் கட்டாமல் பல லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தில் நடைபெற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 நாள் வேலைதிட்டத்தில் 50 லட்சத்திற்கு மேல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல்

கழிவறை கட்டித் தருவது மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெற்றுள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஊழலை  உரிய ஆதாரத்துடன் தமிழ்ச்செல்வி என்பவர் பலரிடமும் கொடுத்த புகாரின் மீது 250 நாட்கள் கடந்தும் நடவடிக்கைகள் எடுக்காமல் மூடி மறைக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகம் என குற்றச்சாட்டை வைக்கிறார்.

இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் என்பதாலும் ஆளுங்கட்சிக்கு அரசு எந்திரம் ஆதரவாக இருப்பதாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என தமிழ்ச்செல்வி கடுமையான குற்றச்சாட்டை வைக்கிறார்.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

அதனால் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கும் இடத்தின் அருகில் அவர் ஊழலை குறித்து டிஜிட்டல் பேனர் வைத்து இது குறித்து நீங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக இருந்தால் நான் எங்கு வேண்டுமானால் வந்து ஊழல் பட்டியலை தருகிறேன் என்று பேனர் வைத்தார்.

இது குறித்து அறிந்த போலீசார் டிஜிட்டல் பேனரை பரிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended