பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் சிப்காட்டை கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தருண் சுரேஷ்
UPDATED: Oct 14, 2024, 7:54:57 AM
திருவாரூர் மாவட்டம்
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தெரிவித்ததாவது... சோழநாடு சோறுடைத்து என்ற பெருமை கொண்ட நெற்களஞ்சியமாக விளங்கும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் அரிசி தேவையை 40 முதல் 50% மட்டுமே பூர்த்தி செய்கிறது.
மீதமுள்ள அரிசி தேவையை அருகே உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து பெற்று தான் நம் மக்களின் தேவை தீர்க்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் சிப்காட்டை கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கடும் கண்டனத்துக்குரியது.
அரசே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்து செயல்படுத்தி, தற்போது அதற்கு எதிராக செயல்படுவது வேதனை அளிக்கிறது இதனை உடனடியாக கைவிட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
சென்னை விமான சாகச கண்காட்சி
சென்னை விமான சாகச கண்காட்சியை நாம் நடத்தி இருக்கவே கூடாது ஏனென்றால் தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள மாநகரங்களையே சென்னை தான் மிகவும் வெப்பமான மாநகரம்.
இந்த சூழலில் பகல் 11 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சியை நடத்தி இருக்கக் கூடாது. ஒன்றிய அரசு செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் சுற்றுச்சூழலுக்கு எதிராக தான் அமைந்துள்ளது.
பிஜேபி
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும், ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்து போக செய்வதற்கான எல்லாம் வேலைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மாநில அரசின் முயற்சிகளை பறித்து எல்லா அதிகாரங்களையும் டெல்லிக்கு கொண்டு செல்வதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறது இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு மட்டுமல்லாமல் மாநில உரிமைகள் சம்பந்தப்பட்ட பார்வையில் கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாடுகள் பெரிய அளவில் பலன் தரவில்லை என்பதை கசப்பான உண்மை.
கடந்த ஐந்து மற்றும் ஆறு ஆண்டுகளில் பருவநிலை மாநாடு தொடர்பான தீர்மானங்களில் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி வந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த மாநாடுகள் பயன்தராமல் போனது என்பது கடும் வேதனையும் கடும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 14-10-2024
சாலை விரிவாக்கம்
கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணங்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பேருந்தில் ஏறி உட்கார்ந்தால் இரண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்து காணப்பட்டு சாலை பயணங்கள் மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது ஆனால் தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை எல்லாம் அகற்றிவிட்ட நிலையில் பயணங்கள் வெறுமையடைந்துவிட்டன.
சாலை போடும்போதே ஒப்பந்தக்காரர்கள் மரத்தை நட்டு பராமரிப்பதையும் ஒரு நடவடிக்கையாகக் கொண்டு மரத்தை நட்டு பராமரித்து விட்ட மரம் வளர்ந்த பிறகுதான் சாலைகளை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்றார்.
பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுங்கள் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என வேண்டுகோள் விடுத்தார்.
பேட்டி : சுந்தர்ராஜன் - பூவுலகின் நண்பர்கள்.