- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை.
திருச்சி விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை.
JK
UPDATED: Aug 19, 2024, 7:44:31 AM
திருச்சி
திருச்சி விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று இன்று காலை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திலிருந்து நேரடியாக பொதுமக்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் 1டோல்கேட் வரை, பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Trichy Airport
அப்போது விமானத்தில் வந்த பயணிகள் அந்தப் பேருந்தில் ஏறி சென்றனர்.
இந்நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி,
திருச்சி விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு