• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பினர் கைது.

பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பினர் கைது.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 3, 2024, 7:46:52 AM

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் அருகே 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டது. 

ஆரம்பகட்ட முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை 709 நாளாக இரவு நேர அற வழி போராடங்கள் , கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கலைஞர் கனவு இல்ல திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் நடைபெற்றது.

இதில் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை என்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் போராட்டக் குழு நிர்வாகிகள் சுமார் 20 பேர் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு கூடி பசுமை விமான நிலையத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியும் , அவரது சிலைக்கு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் போராட்ட குழுவினர் காஞ்சிபுரம் நோக்கி கிளம்பு முயன்றபோது 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவர்களை கைது செய்து சுங்குவாசத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தை ஓட்டி ஏ எஸ் பி தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended