சட்டப்பள்ளி மாணவர்கள் சட்டத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் பல்கலைக்கழகம் எச்சரிக்கை !!!
Bala
UPDATED: Jul 6, 2024, 7:16:21 PM
குற்றம் நியூஸ் அப்டேட்ஸ்
சட்டப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதாகவும், இதற்கான நடவடிக்கைகளை கடுமையாக்க தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் முதல்வர் வே. பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
Latest Tamilnadu News in Tamil
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் சிறந்த சட்டப் பள்ளி, உயர்ந்த தரத்தில் சட்டக் கல்வியை வழங்கி, மாணவர்களை வருங்கால வழக்குரைஞர்கள், நீதிபதிகள் மற்றும் பிற உயரிய பதவிகளுக்கு தயாராக்கி வருகிறது.
தேசிய அளவில் இயங்கி வரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையில் இந்த பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக உள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சில மாணவர்கள் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் சக மாணவர்கள் மீது உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
News
இது சட்டத்தை தங்களுக்காக மாற்றிக் கொள்வதற்கு சமம். சட்டப் பல்கலைக்கழகமாக இதுபோன்ற செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இதுவரை இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் இனிமேல், இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கப்பட்டு, சட்டப் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.