• முகப்பு
  • குற்றம்
  • தேனி அருகே தனி நபர்களுக்கு சொந்தமான இடத்தினை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு.

தேனி அருகே தனி நபர்களுக்கு சொந்தமான இடத்தினை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு.

ராஜா

UPDATED: Aug 28, 2024, 3:39:05 PM

தேனி 

பழனிசெட்டிப்பட்டியில் தனிநபருக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக பல்வேறு கட்சியனர் சார்பாக தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனிசெட்டிப்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் நகர் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது இந்தப் பகுதியில் உள்ளவர்கள் வாசவி காலனி பகுதியை பாதையாக பயன்படுத்தி வந்திருந்தனர்

ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் வாசவி காலனி பகுதியில் கிரிஜா மல்லிகா மற்றும் இவர்களது மகளான சிவரஞ்சினி, ஜெகதாமணி ஆகியோர்களுக்கு சொந்தமான இடத்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்து பொதுபாதையாக மாற்றி பொதுமக்களுக்கு நிலங்களை விற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது

கிரிஜா மல்லிகா அவர்களுக்கு சொந்தமான இடத்தை வருவாய் அலுவலர்களால் முறையாக அளக்கப்பட்டு நீதிமன்ற ஆணை பெற்று அவர்களுக்கு சொந்தமான இடம் என கூறப்பட்ட நிலையில் சிறிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டு பாதைகள் அடைக்கப்பட்டது

Latest Crime News 

இதனால் ஆஞ்சநேயர் தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் செல்லும் பாதையை மூடியதால் சுற்றி செல்லும் நிலைய ஏற்பட்டது இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது

மேலும் இந்தப் பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் வருவாய் கோட்டாட்சியர் முறையாக விசாரணை செய்தும் சிலரது நெருக்கடியால் எங்களுக்கு சொந்தமான இடத்தின் பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டதாக கிரிஜா மல்லிகா தரப்பினர் குற்றச்சாட்டு தெரிவித்து தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக தமிழ் புலிகள் ஐ ஜே கே உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest District News 

மேலும் இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் எங்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை அளித்தனர்....

பேட்டி: வழக்கறிஞர் ஜெகன்.

VIDEOS

Recommended