• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பிளக்ஸ் பேனரில் இருந்து வெளியேறும் கெமிக்கல் வாயு குடியிருப்பு பகுதியில் பரவுவதால் நுரையீரல் தொற்று , கேன்சர் ஏற்படும் அபாயம்

பிளக்ஸ் பேனரில் இருந்து வெளியேறும் கெமிக்கல் வாயு குடியிருப்பு பகுதியில் பரவுவதால் நுரையீரல் தொற்று , கேன்சர் ஏற்படும் அபாயம்

லட்சுமி காந்த்

UPDATED: Nov 4, 2024, 7:06:55 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரத்தில் மையப் பகுதியான மூங்கில் மண்டபம் அடுத்துள்ள மடம் தெரு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 

அப்பகுதியில் சென்னை விலைக்கே 'டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் என்னும் விளம்பர பிளக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

24மணிநேரமும் செயல்படுவதால் அதிலிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த வாயு இந்த பகுதி குடியிருப்பு வாசிகளிடையே பரவி வருகிறது.

இதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு,, கேன்சர் உள்ளிட்ட பல வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது .

இதனை தொடர்ந்து மடம் தெரு பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அப்பகுதி வாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் என்னும் பேனர் நிறுவனத்தை அப்புறப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் .

மேலும் இந்த விளம்பர நிறுவனத்தினால் அதிக தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உமா சங்கர் என்பவருக்கு நுரையீரல் தொற்று, டைலர் கடை வைத்துள்ள நபருக்கு கேன்சர் வியாதி, வேலு என்பவருக்கு தோல் நோய் என பலருக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதால் , மாசுக்கட்டுப்பாடு வாரியம் உடனடியாக இந்த பகுதியில் வந்து ஆய்வு செய்து மக்களுக்கு நிரந்தர தீர்வினை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக உமா சங்கர் என்பவர் கூறும் போது, டிஜிட்டல் பிரின்டிங் பிளக்ஸ் நிறுவனத்திலிருந்து கெமிக்கல் கலந்த ரசாயன வாய்வு வெளியேறுவதால், மூச்சு விட சிரமம், தொண்டையில் புண், கேன்சர் ,நுரையீரல் தொற்று மேலும் துர்நாற்றம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. எனவே இந்த நிறுவனத்தை இங்கிருந்து அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம் என்றார்.

 

VIDEOS

Recommended