விவசாய கடனுக்காக போலி சிட்டாவை கொடுத்த பெண் உட்பட இரண்டு பேர்
JK
UPDATED: Aug 28, 2024, 2:58:57 PM
திருச்சி மாவட்டம்
அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அல்லூரைச் சேர்ந்த பிரகாஷ்(60) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (45) ஆகியோர் விவசாய கடனுக்காக சிட்டா நகல்களை கொடுத்துள்ளனர்.
அவர்கள் கொடுத்த சிட்டா ஆவணங்கள் சரி பார்ப்பதற்காகவேளாண் கூட்டுறவு சங்கத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
போலி சிட்டா
அவற்றை சரிபார்த்த கிராம நிர்வாக அலுவலர் வந்த சிட்டா மற்றும் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த அந்தநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் இது தொடர்பாக ஜீயபுரம் காவல் இடத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் கொடுத்த பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு