• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் பேருந்தில் படிக்கட்டு கீழே விழுந்து விபத்து

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் பேருந்தில் படிக்கட்டு கீழே விழுந்து விபத்து

அந்தோணி ராஜ்

UPDATED: Apr 15, 2024, 12:30:47 PM

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1 மணி அளவில், முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை இயக்கப்படும் நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் இந்த பேருந்து, வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து சாலையோரம் விழுந்துள்ளது.

அந்த சமயம் படிகட்டு மற்றும் பின் பகுதியில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதை அறிந்த ஓட்டுனர், பட்டிக்கட்டை அந்த இடத்திலேயே விட்டு விட்டு பயணிகளை அழைத்து சென்று விட்டார்.

பயணிகளை இறக்கி விட்டு திரும்ப வரும் போது, சாலையோரம் கிடந்த படிக்கட்டை எடுத்துக் கொண்டு பணிமனைக்கு சென்று விட்டனர்.

இந்த சம்பவம் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற பாதுகாப்பு இல்லாத பேருந்துகளால் பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தரப்பில் இருந்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2

VIDEOS

Recommended